Thursday, November 22, 2012

இஸ்ரேல்-காசா யுத்தம் சற்று முன் நிறுத்தப்பட்டது!

இஸ்ரேல்-காசா யுத்தம் சற்று முன் நிறுத்தப்பட்டது!


இஸ்ரேல்-காசா எல்லையின் இருபுறமும் கடந்த 8 நாட்களாக நடைபெற்ற யுத்தம், நிறுத்தப்படுகின்றது என்ற அறிவிப்பு இன்று (புதன்கிழமை) இரவு சற்று நேரத்துக்கு முன் வெளியாகியுள்ளது.

எகிப்து தலைநகர் கய்ரோவில் அமெரிக்க செகிரெடரி ஆஃப் ஸ்டேட் ஹிலரி கிளின்டனும், எகிப்திய வெளியுறவு அமைச்சர் மொஹமெட் கமல் அம்ரும் யுத்த நிறுத்த அறிவிப்பை எகிப்திய நேரம் இரவு 9 மணிக்கு (இந்திய நேரம் இரவு 12.30) வெளியிட்டனர்.

அறிவித்தல் வெளியான நிமிடத்தில் இருந்தே யுத்த நிறுத்தம் அமலுக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 8 நாள் யுத்தத்தில், இஸ்ரேலிய தரப்பு, விமான குண்டுவீச்சுகளை அதிகம் நடத்தியது. ஹமாஸ் தரப்பு, ராக்கெட் வீச்சுக்களை அதிகம் நடத்தியது. இரு தரப்பிலும் 150 பேர் கொல்லப்பட்டனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காசாவில் ஹமாஸ் பிரதமர் அலுவலகம் உட்பட, அமைச்சு அலுவலகங்கள் தகர்க்கப்பட்டன. சேதம், காசாவில்தான் அதிகம்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!