Wednesday, November 21, 2012

தீவிரவாதி கசாப் இன்று தூக்கில்! உளவுத்துறை அட்வைஸில் அடக்கி வாசிக்கப்பட்டது!

தீவிரவாதி கசாப் இன்று தூக்கில்! உளவுத்துறை அட்வைஸில் அடக்கி வாசிக்கப்பட்டது!






மும்பை வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப், இன்று காலை தூக்கிலிடப்பட்டார். புனேவில் உள்ள எரவாட சிறையில் இன்று காலை 7.30 மணிக்கு கசாப்பிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இன்று காலை கசாப்புக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்ற விஷயம், மிகவும் அடக்கி வாசிக்கப்பட்டது. இன்று தண்டனை வழங்கப்படும் என்ற விஷயம் தெரிந்தால், தீவிரவாதிகள் வேறு எங்காவது அடையான தாக்குதல் ஒன்றை நடத்தலாம் என உளவுத்துறை எச்சரித்ததே அதற்கு காரணம்.

கசாப்பை தூக்கிலிட வேண்டாம் என குடியரசுத் தலைவருக்கு கருணை மனு செய்யப்பட்டிருந்தது. கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்ததைத் தொடர்ந்து, கசாப்புக்கான தூக்கு தண்டனை இன்று காலை நிறைவேற்றப்பட்டது.

2008-ல் மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் 166 பேர் பலியாகினர். மும்பையில் தாக்குதல் நடத்திய 10 தீவிரவாதிகளில், கசாப் மட்டுமே பிடிபட்டார். ரயில் நிலையம், தாஜ் ஓட்டலில் நடந்த தாக்குதலில் ஒன்பது தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தூக்கு தண்டனை நிறைவேற்றும் முன் கசாப்பிடம் கடைசி ஆசை பற்றி கேள்வி கேட்கப்பட்டது. “எனக்கு அப்படியான இறுதி ஆசை எதுவும் இல்லை” என்று கசாப் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.




No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!