Monday, November 26, 2012

மும்பை தாக்குதல் நடந்து இன்றோடு 4 ஆண்டுகள்! நகரில் பலத்த பாதுகாப்பு!!

மும்பை தாக்குதல் நடந்து இன்றோடு 4 ஆண்டுகள்! நகரில் பலத்த பாதுகாப்பு!!




மும்பை தாக்குதல் சம்பவம் நடந்து இன்றோடு நான்கு ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. இதையடுத்து நகரம் முழுவதும்  பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2008 நவம்பர் 26-ம் தேதி பாகிஸ்தானில் இருந்து வந்த தீவிரவாதிகள் 10 பேர் மும்பைக்குள் ஊடுருவி சி.எஸ்.டி. ரயில் நிலையம், காமா மருத்துவமனை, தாஜ் மற்றும் ஒபேராய் ஹோட்டல்கள் உட்பட பல இடங்களில் நடத்திய தாக்குதல்களில் 166 பேர் கொல்லப்பட்டனர்.

மும்பை தாக்குதலில் பங்குகொண்ட கசாப்புக்கு கடந்த வாரம் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதால், தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை இது.

கசாபை தூக்கிலிட்டதற்கு பழிவாங்கும் வகையில் இந்திய இலக்குகளை குறிவைத்து தாக்குவோம் என்று பாகிஸ்தான் தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் மட்டுமின்றி உலகில் எந்தவொரு பகுதியிலும் இந்த தாக்குதல் நடக்கும் என்று தெஹ்ரீக்-ஐ-தலிபான் பாகிஸ்தான் (டி.டி.பி.) இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் இசனுல்லா இசான் கூறியிருந்தார்.

இந்த நிலையில் மும்பை தாக்குதல் சம்பவம் நடந்து இன்றுடன் நான்கு ஆண்டுகள் பூர்த்தியாகிறது. இதனையொட்டி மும்பை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!