Monday, December 3, 2012

டோக்கியோ TUNNEL பாதை இன்று காலை இடிந்தது! உள்ளே சிக்கிய கார்கள் எரிகின்றன!

டோக்கியோ TUNNEL பாதை இன்று காலை இடிந்தது! உள்ளே சிக்கிய கார்கள் எரிகின்றன!



ஜப்பானில் டோக்கியோ நோக்கி செல்லும் tunnel பாதை ஒன்று இன்று காலை இடிந்து விழுந்ததில், உள்ளே சில கார்கள் சிக்கிக் கொண்டன. இந்தக் கார்களையும், அதற்குள் உள்ளவர்களையும் மீட்கும் நடவடிக்கைகள் தற்போது நடைபெறுகின்றன.

இந்த tunnel வாயில் ஊடாக புகை வெளிவந்து கொண்டிருப்பதால், உள்ளே சிக்கிக் கொண்ட கார்கள் தீப்பிடித்து எரிகின்றன என ஊகிக்கப்படுகிறது.

Sasago tunnel என்ற இந்த மோட்டார் பாதை, சுவோ எக்ஸ்பிரஸ்-வே பாதையில் உள்ளது. இன்று காலை 8 மணிக்கு இந்த விபத்து நடந்தது. தலைநகர் டோக்கியோ நோக்கிச் செல்லும் மிகவும் பிசியான பாதை இது என்ற போதிலும், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், அதிக கார்கள் இல்லை. சுமார் 5 கார்கள் உள்ளே சிக்கியிருக்கலாம் என ஜப்பானிய டி.வி. சேனல், கியோடோ நியூஸ் தெரிவிக்கிறது.

என்பதை உறுதி செய்ய முடியவில்லை” என்று தெரிவித்துள்ளது. தீயணைப்பு படையினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

டி.வி. லைவ் டெலிகாஸ்ட்டில், tunnelக்கு உள்ளே சிக்கியுள்ள கார்கள், தமது லைட்களை பிளாஷ் அடித்து சிக்னல் கொடுப்பது தெரிகிறது.

4.3 கி.மீ நீளமுள்ள இந்த tunnelக்கு உள்ளே சிக்கிக் கொண்டவர்களில் ஒரு பெண் மீட்புப் படையினரால் மீட்கப்பட்டு, வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். விபத்து நடைபெற்ற tunnelன் பகுதியில் உள்ள காற்று வெளியேறும் துவாரங்கள், உள்ளேயுள்ள புகையை வெளியேற்றும் அளவுக்கு பெரிதாக இல்லாத காரணத்தால், உள்ளே புகை மண்டலமாக உள்ளது. அதிகளவு புகை, tunnel வாயில் ஊடாகவே வெளியாகிக் கொண்டிருக்கிறது.

நீண்ட தொலைவில் இருந்து பார்க்கும்போதுகூட, tunnelல் இருந்து புகை வெளியேறுவது தெரிகிறது. அந்த ஏரியாவே புகை படர்ந்த நிலையில் காணப்படுவதை போட்டோவில் பாருங்கள்.




No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!