Wednesday, December 5, 2012

மார்ச்சில் நாடு முழுவதும் ஒரே கட்டணம

செல்போன் ரோமிங் கட்டணம் 3 மாதங்களில் ரத்தாகிறது




இன்னும் 3 மாதத்தில் நாடு முழுவதும் செல்போன்களுக்கான ரோமிங் கட்டணம் நீக்கப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் ஒரே கட்டணமாக இருக்கும்.

செல்போன்களை ஒரு மாநிலத்துக்கு உள்ளேயே பயன்படுத்தும்போது, அதற்கு கூடுதலாக எந்த கட்டணமும் வராது. ஆனால், ஒரு மாநிலத்தை விட்டு மற்றொரு மாநிலத்துக்கு செல்லும்போது, ரோமிங் என்ற பெயரில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதேபோல், வெளிமாநிலங்களில் இருக்கும்போது, சொந்த மாநிலத்தில் உள்ள எண்களுக்கு பேசும்போது, ரோமிங் அழைப்பு என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதை முழுமையாக நீக்க கடந்த மே மாதத்தில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஆனால், எப்போது இருந்து இதை அமல்படுத்துவது என்று கால நிர்ணயம் செய்யப்படவில்லை. இந்நிலையில், தொலைத் தொடர்புத் துறை தற்போது விழித்துக் கொண்டுள்ளது. வரும் 3 மாதத்தில் ரோமிங் கட்டணத்தை நீக்க வேண்டும் என்று தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. ரோமிங் கட்டணத்தை நீக் கும்போது செய்யப்பட வேண்டிய தொழில்நுட்ப வசதி களை செய்து கொள்வதற்காகவே இந்த 3 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரோமிங் கட்டணத்தை நீக்கும்போது, தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ஒரே லைசென்ஸ் வழங்க வேண்டிய சூழ்நிலையும் அமைச்சகத்துக்கு உள்ளது. தற்போதுள்ள கால அவகாசம் இதற்கு பயன்படுத்திக் கொள்ளப்படும் என்று அமைச்சகம் கூறியுள்ளது. ஆனால், ரோமிங் கட்டணத்தை நீக்க தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதை நீக்குவதால் தங்களுடைய வருவாய் பாதிக்கும் என்று அவை கூறியுள்ளன. தற்போது ரோமிங் கட்டணமாக போனுக்கு வரும் அழைப்புகளுக்கு ஸி1ம், வெளியே செல்லும் அழைப்புகளுக்கு ரூ.1.50ம், எஸ்.எம்.எஸ்.களுக்கு ரூ.1.50ம் சராசரியாக வசூலிக்கப்படுகின்றன.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!