Tuesday, December 4, 2012

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் ஐடியூன்ஸ் ஸ்டோர் அறிமுகம்

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் ஐடியூன்ஸ் ஸ்டோர் அறிமுகம்


வாடிக்கையாளர்கள்  இசை, திரைப்படம் வாங்க ஆப்பிள் நிறுவனம் ஐடியூன்ஸ் ஸ்டோர் (iTunes store) அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் ஐடியூன்ஸ் ஸ்டோர் (iTunes store) முக்கியத்துவம் மற்றும் பாலிவுட் உள்ளடக்கத்தை கொண்டுள்ளது. ஏப்ரல் 2003ல் அமெரிக்காவில்  மட்டுமே ஐட்யூன்ஸ் மியூசிக் ஸ்டோர் (iTunes music store) அரங்கேறியது. இதில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சேர்க்கப்பட்டது  இன்று வரை 12 ஆசிய நாடுகளில் விரிவாக்கம் செய்து, ஏறத்தாழ 97 நாடுகளில் கிடைக்கிறது.

இந்தியாவில் ஐடியூன்ஸ் ஸ்டோரில்  பாடல்கள் மற்றும் திரைப்படங்களின் விலை மிகவும் மலிவாக உள்ளது. பிளிப்கார்ட் விலையை ஒப்பிடுகையில் புதிய பாடல்கள் விலை ரூ.15 எனில் இதில் ரூ.12 க்கு விற்கப்படுகிறது.  இதேபோல் திரைப்படம் வாடகைக்கு ரூ. 80க்கும், விற்பனைக்கு ரூ. 120, ரூ. 290, மற்றும் ரூ. 490  என்ற விலைகளில் கிடைக்கிறது. ஆனால் பல்வேறு பிற சர்வதேச சந்தைகள் போல டி.வி  நிகழ்ச்சிகள் இடம் பெறவில்லை. சமீபத்திய ஐடியூன்ஸ் ஸ்டோர் விரிவாக்க பகுதியாக ரஷ்யா மற்றும் இந்தோனேஷியா ஆகியவை அடங்கும்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!