Wednesday, December 5, 2012

செய்வாய் கிரகத்தை ஆராய இன்னொரு ரோவர் விண்கலத்தை 2020 ஏவ நாசா திட்டம்

செய்வாய் கிரகத்தை ஆராய இன்னொரு ரோவர் விண்கலத்தை 2020 ஏவ நாசா திட்டம்



அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, செவ்வாய் கிரகத்தில் மக்கள் வாழ்வதற்கான சூழல் குறித்து ஆய்வு செய்து வருகின்றது.
இதற்காக வருகிற 2020ஆம் ஆண்டு மேலும் ஒரு ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது செவ்வாய் கிரகத்தை 13 கமெராக்கள் பொருத்தப்பட்ட கியூரியாசிட்டி என்ற ரோபோ விண்கலம் ஆராய்ந்து வருகின்றது.

இதே போன்று வருகிற 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், மற்றுமொரு ரோவர் விண்கலம் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் 2 1/2 பில்லியன் டொலர் செலவில் செலுத்தப்படும் இந்த ரோவர் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் மக்கள் வாழ்வதற்கான சூழ்நிலைகள் பற்றி ஆராயவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

இதற்கிடையே விண்கலங்களை அனுப்பி வெற்றிக்கண்டுள்ள பழைய தொழில்நுட்பங்களையே மீண்டும் பயன்படுத்த நாசா திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!