Wednesday, December 5, 2012

பிலிப்பைன்ஸை தாக்கியது போபா புயல்: 43 பேர் பலி

பிலிப்பைன்ஸை தாக்கியது போபா புயல்: 43 பேர் பலி



பிலிப்பைன்ஸ் நாட்டின் மின்டானௌ தீவை போபா புயல் நேற்று தாக்கியதில் 43 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
பிலிப்பைன்சில் மணிக்கு 210 கிலோமீற்றர் வேகத்தில் வீசிய புயல், மின்டானௌ தீவில் நேற்று கரையை கடந்தது.

இதனால் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வர்த்தக நகரான ககாயான் டியோரோ நீரில் மூழ்கியுள்ளது.

41 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மின்டானௌ நகரில் அருகேயுள்ள கிராமத்தில் ஏராளமானவர்கள் உயிரிழந்தனர்.

இந்த கிராமத்தில் திடீரென வெள்ளம் புகுந்ததால், இராணுவ ரோந்து முகாமை அடித்து சென்றதாக நகர மேயர் தெரிவித்துள்ளார்.

கம்போஸ்டெலா பள்ளத்தாக்கு மாகாண ஆளுநர் அர்டுரோ உய் கூறுகையில், 34 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்னும் ஏராளமானவர்கள் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளது.

நியூ பாட்டன் பகுதியில் இராணுவ வீரர்களும், பொதுமக்களும் சென்ற வாகனம் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது என்றார்.





















No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!