Wednesday, December 5, 2012

செவ்வாய், சந்திரனில் தோட்டம் அமைக்க இருக்கிறது சீனா

செவ்வாய், சந்திரனில் தோட்டம் அமைக்க இருக்கிறது சீனா



செவ்வாய் கிரகத்திலும், சந்திரனிலும் காய்கறி தோட்டம் அமைக்க சீன விண்வெளி ஆராய்ச்சி மையம் திட்டமிட்டு உள்ளது.
அமெரிக்கா, ரஷ்யாவுக்கு போட்டியாக சீனாவும் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு முன்னேற்றமும் கண்டு வருகிறது.

இந்நிலையில் சந்திரனுக்கும், செவ்வாய்க்கும் மனிதர்கள் அனுப்ப சீன விண்வெளி ஆய்வு மையம் தீவிரமாக உள்ளது.

இதனையடுத்து அங்கு செல்லும் வீரர்கள் சுவாசிப்பதற்கும், காய்கறிகளை உண்பதற்கும் ஏற்ற வகையில், சிறிய தோட்டங்களை அமைப்பது குறித்த ஆராய்ச்சியில் வெற்றி பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து அங்கு சிறிய தோட்டங்களை அமைக்கவும், ஆடு, முயல் மற்றும் கோழி போன்ற பிராணிகளை வளர்த்து அதன் இறைச்சியை சாப்பிடுவதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தவும் ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!