Monday, December 3, 2012

சரக்கு கப்பலில் பயன்படுத்தப்படும் கொள்கலன்கள் வீடுகளாகின்றன: கனடாவில் புதிய முயற்சி

சரக்கு கப்பலில் பயன்படுத்தப்படும் கொள்கலன்கள் வீடுகளாகின்றன: கனடாவில் புதிய முயற்சி



சரக்கு கப்பல்களில் பொருட்களை அனுப்ப பயன்படும் கொள்கலன்களை வீடுகளாக்கும் முயற்சி பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வான்கூவர் பகுதியில் இடம்பெற்று வருகின்றது.
கடந்த 2009ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியா மின்சார சபை இரண்டு கொள்கலன்களை தன்னார்வ தொண்டு நிறுவனங்களிற்கு இலவசமாக கொடுக்க முன்வந்தது.

இதனை வீடாக உபயோகிக்கும் திட்டத்தை ஆரிறா பெண்கள் மையம் சமர்பித்து இரு கொள்கலன்களையும் வீடாக மாற்றியது.

இந்த திட்டம் வெற்றி அடைந்ததால், மேலும் 10 கொள்கலன்களை வாங்கி இந்த திட்டத்தை செயற்படுத்தி உள்ளது.

மேலும் இந்த மையம் தற்போது பராமரிப்பு நிலையங்களில் தனிஅறையில் வசிக்கும் 55 வயதிற்கு மேற்பட்ட ஆறு பெண்களையும், இளம் பெண்கள் ஆறு பேரையும் இவ்வீட்டிற்கு நகர்த்தி உள்ளது.

சுமார் 320 சதுர அடிப் பரப்பளவுள்ள இந்தக் கொள்கலன்களில் படுக்கையறை, குளியலறை மற்றும் சமையலறை என்பனவற்றோடு துணிதுவைக்கும் இயந்திரங்களும் உள்ளடக்கப்படடிருக்கும்.

12 வருடங்கள் பாவிக்கக்கூடிய இந்தக் கொள்கலன் வீடுகளில் திருத்தங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டால், இதன் பாவனைக்காலம் அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!