Thursday, November 29, 2012

தெலுங்கு படிப்பது கட்டாயம் மத்திய கல்வி நிறுவனங்கள் ஆந்திர அரசுக்கு எதிர்ப்பு

தெலுங்கு படிப்பது கட்டாயம் மத்திய கல்வி நிறுவனங்கள் ஆந்திர அரசுக்கு எதிர்ப்பு




ஆந்திராவில் உள்ள பள்ளிகளில் தெலுங்கு பாடத்தை கட்டாயமாக்கும் அரசின் முடிவுக்கு மத்திய கல்வி நிலையங்களும், பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.ஆந்திராவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தெலுங்கு பாடத்தை கட்டாயமாக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான உத்தரவை 2 வாரங்களில் பிறப்பிக்கப் போவதாக ஆந்திர மாநில உயர் கல்வி அமைச்சர் பார்த்தசாரதி கடந்த திங்கட்கிழமை அறிவித்தார். பள்ளிகளில் மட்டுமின்றி, பட்டப் படிப்பு வரையிலான கல்லூரிகளிலும் தெலுங்கு பாடம் கட்டாயமாக்கப்படுகிறது.ஆந்திரா முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிபிஎஸ்சி , ஐசிஎஸ்இ பள்ளிகளும், கேந்திர வித்யாலயா பள்ளிகளும் உள்ளன. சிபிஎஸ்சி, ஐசிஎஸ்இ பள்ளிகளில் தெலுங்கு பாடம் 2வது அல்லது 3வது விருப்பப்படமாக வைக்கப்பட்டுள்ளது. மேலும், 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் விருப்பப்பட்டால் மட்டுமே, அந்த வகுப்பில் தெலுங்கு பாடம் கற்பிக்கப்படுகிறது.

கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தெலுங்கு பாடமே இல்லை.இதனால், ஆந்திர அரசு திடீரென எடுத்துள்ள இந்த முடிவுக்கு மத்திய கல்வி நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதற்கான ஏற்பாடுகள் எதையும் தங்களுடைய நிர்வாகம் செய்யவில்லை என்று அவை கூறியுள்ளன. அதோடு, ஐதராபாத், விசாகப்பட்டிண நகரங்களில் வசிக்கும் வெளிமாநில மக்கள் மட்டுமின்றி, தெலுங்கு மக்களும் அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!