Monday, November 26, 2012

பின்லேடனின் இறுதிச்சடங்கு எவ்வாறு நடந்தது

பின்லேடனின் இறுதிச்சடங்கு எவ்வாறு நடந்தது




கடந்த ஆண்டு மே 1 அன்று அமெரிக்காவின் நேவி சீல் குழுவால் கொல்லப்பட்டதாக கூறப்படும் அல் கைதாவின் தலைவர், ஒசாமா பின் லேடன் எவ்வாறு புதைக்கப்பட்டார் என்ற தகவல்களை அஸோசியேட் பிரஸ் நிறுவனம் பெற்றுள்ளது. அமெரிக்க இராணுவ அதிகாரிகள் இருவர் பரிமாறிக்கொண்ட மின்னஞ்சல் ஒன்றினூடாகவே இத் தகவல்களை தாம் பெற்றதாக அது மேலும் தெரிவித்துள்ளது. தகவல் சுதந்திர சட்டத்தின் மூலம் இத்தகவலை பெற்றுள்ள அந்நிறுவனம், இஸ்லாமிய அடிப்படையில் ஒசாமாவின் உடல் கழுவப்பட்டு பின் வெள்ளை துணியில் வைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது. வெள்ளை துணியில் ஒசாமாவின் உடல் சுற்றப்பட்டு, பின் ஒரு அரபியின் உதவியுடன் மத வாசகங்களை ராணுவ அதிகாரி ஒருவர் சொல்ல, ஒசாமாவின் உடல் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டு கடலில் எறியப்பட்டதாக சொல்கிறது. ஒசாமா எங்கு புதைக்கப்பட்டார் என்ற விபரம் வெகு சிலருக்கே தெரியும் என்று கூறும் அவ்வறிக்கை ஒசாமா கொல்லப்பட்ட மறு தினம் (மே 2) அன்று இது தொடர்பான மின்னஞ்சல் அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

ஆனால் ஒசாமாவின் உடல் எங்குள்ளது, ஏன் ஒசாமாவின் இறப்பு சான்று வெளியிடப்படவில்லை, என்பது போன்ற சர்ச்சைக்குரிய விடையங்களை அமெரிக்கா இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும். ஏற்கனவே கொல்லப்பட்ட பின்லேடன் மகன் ஒருவரின் டி.என்.ஏ மாதிரியை அமெரிக்கா வைத்திருந்தது. அதனுடன் பின்லேடனின் டி.என்.ஏ வை ஒப்பிட்டுப் பார்த்து, அது உண்மையாகவே பின்லேடன் தான் என உறுதிசெய்த பிற்பாடு, அமெரிக்க போர் கப்பல் ஒன்றில் வைத்து, பின்லேடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது என்பது தான் உண்மையாகும்.


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!