Thursday, November 29, 2012

மேட்டூர் அணை பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம்! சிறிய வீடுகள் அதிர்ந்தன!!

மேட்டூர் அணை பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம்! சிறிய வீடுகள் அதிர்ந்தன!!



இன்று அதிகாலை 3.49 மணிக்கு மேட்டூர் அணை பகுதியில் திடீரென நிலநடு்க்கம் ஏற்பட்டதை அடுத்து, மக்கள் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளி‌யேறி வெளியே நின்றனர். சிறிய வீடுகள் அதிர்ந்தது தெளிவாக தெரிந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் கரையின் ஒரு புறத்தில் ‌சேலம் மாவட்டமும், மறு புறத்தில் தர்மபுரி மாவட்டமும் அமைந்துள்ளன. அணைக் கரையின் ஒருபுறத்தில் உள்ள சேலம் மாவட்ட பகுதியை சேர்‌ந்த மூலக்காடு, பண்ணைவாடி, சேத்துக்குழி, மேச்சேரி, டி.என்.பட்டி, சின்ன மேட்டூர், கொளத்தூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள், அணையின் கரையில் உள்ள வறண்ட பகுதிகளில் சிறிய வீடுகள் கட்டி வசிக்கின்றனர். இவர்களின் பிரதான தொழில், விவசாயம்.

நேற்று வழக்கம் போல் விவசாய பணிகளை முடித்து விட்டு இரவில் தூங்கச் சென்ற விவசாயிகள், இன்று அதிகாலை 3.49 மணிக்கு வீடுகள் அதிர்வதை கண்டு பீதியடைந்து வீட்டை விட்டு குழந்தைகளுடன் வெளியே வந்தனர். பெரும்பாலான வீடுகள், கூரை, மற்றும் சிமெண்ட் ஒடுகள் கொண்ட வீடு‌களாக உள்ளதால், நில அதிர்வு அதிகளவில் உணரப்பட்டது.

அதே நேரத்தில் காங்கிரீட் வீடுகளில், அதிர்வு பெரிதாக உணரப்படவில்லை. கூரை வீடுகளில் லேசான விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.

அணையி்ன் கரை பகுதிகளில் மெலிதான நிலநடு்க்கம் ஏற்படுவது இது இரண்டாவது முறை. சில ஆண்டுகளுக்கு முன்னர் கரையின் மறுபக்கத்தில் உள்ள தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பகுதிகளில் இது போன்ற நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் அணைப்பகுதியில் எந்த பாதிப்பும் இல்லை என கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!