Monday, November 26, 2012

குளிர்கால சரும பிரச்னைகளுக்கு

குளிர்கால சரும பிரச்னைகளுக்கு




குளிர்காலத்தில் உடலுக்கு எப்படி பிரச்சனைகள் வருகிறதோ, அதேப் போன்று சருமத்திற்கும் நிறைய பிரச்சனைகள் வரும்.
அதிலும் இதுவரை நன்கு அழகாக பராமரித்து வந்த சருமம், குளிர்காலம் என்றால் உடனே மாறிவிடும். ஆகவே அந்த மாதிரியான காலத்தில் சருமத்தை நன்கு அழகாக பராமரிக்க ஃபேஸ் மாஸ்க், ஸ்கரப் போன்றவற்றை செய்ய வேண்டும்.

அவோகேடோ மாஸ்க்

வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கு அவோகேடோ ஃபேஸ் மாஸ்க் தான் எப்போதும் சிறந்தது.

அதற்கு அவோகேடோ பழத்தை அரைத்து, ஆலிவ் ஆயிலுடன் சேர்த்து, பேஸ்ட் போல் கலந்து முகத்திற்கு தடவி மாஸ்க் போட்டால் சருமத்திற்கு தேவையான வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வறட்சியின்றி மென்மைத்தன்மை போன்றவை கிடைக்கும்.

பால் ஃபேஸ் மாஸ்க்

சருமம் சோர்வின்றி காணப்பட்டால் அப்போது பால் பொருட்களை வைத்து மாஸ்க் செய்தால் சரியாகிவிடும்.

அதிலும் தயிர், மோர், புளிப்பு க்ரீம் போன்றவற்றை கலந்து முகத்தில் பூசி 10-15 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

இதனால் சருமத்தில் உள்ள pH-இன் அளவு சமமாக இருப்பதோடு குளிர் காலத்தின் போது வீசும் காற்றினால் சருமத்தில் எந்த ஒரு பிரச்சனையும் வராமல் தடுக்கும.

முட்டையின் வெள்ளைக் கரு மாஸ்க்

எண்ணெய் பசை சருமத்திற்கு இந்த மாஸ்க் மிகவும் சூப்பராக இருக்கும்.

அதற்கு முட்டையின் வெள்ளைக்கருவை முகத்திற்கு தடவி, 1/2 மணிநேரம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

ஓட்ஸ் மாஸ்க்

குளிர்காலத்திற்கு ஓட்ஸ் மிகவும் சிறந்ததாக இருக்கும். இந்த மாஸ்க் செய்வதற்கு ஓட்ஸ், முட்டை மஞ்சள் கரு மற்றும் தேன் போன்றவற்றை நன்கு கலந்து முகத்திற்கு தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

இதனால் சருமம் நன்கு மென்மையாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!