Thursday, November 29, 2012

திருவனந்தபுரம் மத்திய சிறையில் இட்லி, சாம்பார் அமோக விற்பனை

திருவனந்தபுரம் மத்திய சிறையில் இட்லி, சாம்பார் அமோக விற்பனை



திருவனந்தபுரம் மத்திய சிறையில் கைதிகள் தயாரித்து விற்கும் சப்பாத்தி, சிக்கன் குழம்புக்கு அமோக வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, நேற்று முதல் இட்லி, சாம்பார் விற்பனையும் தொடங்கப்பட்டது. கேரளாவில் திருவனந்தபுரம் பூஜப்புராவில் மத்திய சிறை உள்ளது. இங்கு 1,000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். கடந்தாண்டு டிசம்பர் முதல் இந்த சிறையில் கைதிகள் சமைக்கும் சப்பாத்தி, சிக்கன் குழம்பு மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஐந்து சப்பாத்தி, ஒரு சிக்கன் குழம்பு விலை ரூ.30 மட்டுமே. விலை குறைவு என்பதாலும், ஓட்டலில் கிடைப்பதை விட மிகுந்த தரத்துடன் இருப்பதால், இவற்றுக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கிடையே, 5 மாதங்களுக்கு முன்பு நடமாடும் சப்பாத்தி, சிக்கன் ஸ்டால் தொடங்கப்பட்டது. . கடந்த 11 மாதங்களில் ரூ. 3 கோடியே ,13 லட்சத்து 68 ஆயிரத்து 852க்கு சப்பாத்தி, சிக்கன் குழம்பு விற்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், கைதிகளின் சிக்கன், சப்பாத்தி ருசியை பற்றி அறிந்த ஏராளமான சைவ பிரியர்கள்,  தங்களுக்கு இட்லி, சாம்பார் தயாரித்து விற்கும்படி முதல்வர் உம்மன்சாண்டியிடம் கோரிக்கை விடுத்தனர். இதை பரிசீலித்த உம்மன்சாண்டி, திருவனந்தபுரம் மத்திய சிறையில் இட்லி, சாம்பார் தயாரித்து விற்கும்படி கண்காணிப்பாளர் பிரதீப்புக்கு உத்தரவிட்டார். இதன்படி, நேற்று முதல் இட்லி, சாம்பார் விற்பனையும் தொடங்கப்பட்டு உள்ளது. இதை மாநில உள்துறை அமைச்சர் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். ஐந்து இட்லி, ஒரு பாக்கெட் சாம்பார் விலை ரூ.20. நவீன இயந்திரம் மூலம் 15 நிமிடங்களில் 600 இட்லி தயாரிக்கின்றனர்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!