Thursday, November 29, 2012

தொழில்துறை வேலை வாய்ப்பில் அரியானா, குஜராத் முதலிடம்

தொழில்துறை வேலை வாய்ப்பில் அரியானா, குஜராத் முதலிடம்



தொழில் துறையில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில், அரியானா, குஜராத் மாநிலங்கள் முதலிடத்தில் உள்ளன என்று வர்த்தக கூட்டமைப்பான அசோசேம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அசோசேம் தலைவர் ராஜ்குமார் தூத் கூறியதாவது: அரியானாவும், குஜராத்தும் தொழில்துறையில் அதிகளவு வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. அரியானாவில் நகர்ப்புறங்களில் 1,000 பேருக்கு 319 பேர் தொழில் துறையில் பணியாற்றுகின்றனர். இதேபோல், குஜராத்தில் 306 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் தேசிய சராசரி அளவு 242.

ஓட்டல், சுற்றுலா, போக்குவரத்து உள்ளிட்ட சேவை துறைகள் பெரும்பாலும் நகர்ப்புறங்களில்தான் அதிகளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. சேவை துறையில், தேசிய அளவில் 1,000க்கு 683 பேர் வேலை தேடுகின்றனர். ஆனால், இந்த விஷயத்தில் குஜராத்தில் 641 பேரும், அரியானாவில் 627 பேர் சேவை துறையில் வேலைவாய்ப்பு தேடுகின்றனர்.

அதாவது, தேசிய சராசரியை விட சேவை துறையில் வேலைவாய்ப்பு தேடுவோர் எண்ணிக்கை இம்மாநிலங்களில் குறைவாக உள்ளது. தொழில்துறையில் நாளுக்குள் நாள் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. பீகாரில் 1000 பேரில் 121 பேருக்கும், அசாமில் 137 பேருக்கும், ராஜஸ்தானில் 186 பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், ராஜஸ்தானில் சேவை துறையான சுற்றுலாவில் அதிகளவில் வேலைவாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு ராஜ்குமார் தூத் கூறினார்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!