Monday, November 5, 2012

நடுவானில் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி

நடுவானில் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி






நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது தம்பதியினர் ஒருவர் புதுவிதமான முறையில் திருமணம் செய்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள உத்தாவில் தோயல் நகரை சேர்ந்த பாராசூட் வீரர் ஆலன்ரூலி. அதே பகுதியை சேர்ந்த பாராசூட் வீராங்கனை எமிலிலு சேரேர்.

இவர்கள் இருவரும் வானத்தில் இருந்து பாராசூட் மூலம் குறித்து பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை செய்துள்ளனர்.

கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் புதுவிதமான முறையில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

அதன் படி நடுவானில் விமானத்தில் பறந்தபடியே திருமணம் செய்தனர். அதனை தொடர்ந்து 5 நிமிடத்தில் இவர்கள் இருவரும் 13 அடி உயரத்தில் விமானத்தில் இருந்தபடியே பாராசூட் மூலம் குதித்தனர்.

இதுகுறித்து அவர்கள், இதற்கு முன்பு பேரா கிளைடிங், தண்ணீருக்குள் மூழ்குதல் உட்பட பல சாதனைகளை செய்துள்ளோம். அதே போன்று தான் இதையும் வேடிக்கையாக செய்தோம் என்று தெரிவித்துள்ளனர்.



No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!