Monday, November 5, 2012

உலகில் முதன்முறையாக அரிய விண்வெளி புகைப்படங்கள் ஏலம்

உலகில் முதன்முறையாக அரிய விண்வெளி புகைப்படங்கள் ஏலம்






ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் 1000க்கும் மேற்பட்ட அரிய விண்வெளி புகைப்படங்கள் ஏலத்திற்கு வருகின்றன.
விண்வெளி ஆராய்ச்சியின் ஆரம்ப காலத்தில் எடுக்கப்பட்ட 4,500 புகைப்படங்களே இவ்வாறு ஏலத்திற்கு வருகின்றன.

இந்த புகைப்படங்களை ஐரோப்பியாவை சேர்ந்த புகைப்பட சேகரிப்பாளர் விற்பனைக்கு வைக்க உள்ளார்.

கடந்த 1960ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவுக்கும், அப்போதைய சோவியத் யூனியனுக்கும் இடையே விண்வெளி ஆராய்ச்சி துறையில் கடும் போட்டி நிலவியது.

ஆளில்லாத விண்கலங்கள், ஒன்று அல்லது இருவரை மட்டும் ஏற்றிச் செல்லும் விண்வெளி ஓடங்களை தயாரிப்பதில் இரு நாடுகளும் முனைப்பு காட்டின.

இறுதியில் நிலவுக்கு நீல் ஆம்ஸ்ட்ராங் தலைமையில் விண்வெளி ஓடத்தை அனுப்பி அமெரிக்கா வரலாறு படைத்தது.

அப்போது நிலவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும், வேறு சில அரிய விண்வெளி புகைப்படங்களும் இந்த ஏலத்தில் இடம்பெறவுள்ளன.

இந்த ஏலத்தின் மூலம் ரூ. 4 கோடியே 14 லட்சம் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சம்பந்தப்பட்ட ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற புகைப்படங்கள் அதிகளவில் விற்பனைக்கு வருவது உலகளவில் இதுவே முதல்முறையாகும்.





No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!