Friday, November 9, 2012

Top News : ஜெயித்த பின் வெளியிட தயாராக இருந்த ‘ஜனாதிபதி ராம்னி’ வெப்சைட் தவறுதலாக லீக்!

Top News : ஜெயித்த பின் வெளியிட தயாராக இருந்த ‘ஜனாதிபதி ராம்னி’ வெப்சைட் தவறுதலாக லீக்!



அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நீங்கள் ஒபாமாவுக்கு எதிரணி ஆதரவாளராக இருந்திருந்தால், இந்த செய்தியில் உள்ள போட்டோக்களை பார்ப்பதை தவிர்த்துவிடுங்கள். காரணம், இவை உங்களை மேலும் கடுப்பேற்றி விடக்கூடியவை.

தொடர்ந்து படிக்கிறீர்களா? வாருங்கள், இங்கு இணைக்கப்பட்டுள்ள போட்டோக்கள் ஒரு இணையதளத்தின் ஸ்கிரீன் ஷாட்கள்.

ஒபாமாவுக்கு எதிராக போட்டியிட்ட ராம்னி, தாம் நிச்சயம் ஜெயிப்போம் என்ற நம்பிக்கையில் உருவாக்கிய, ‘அமெரிக்க ஜனாதிபதி ராம்னி’ வெப்சைட் இது. தேர்தல் முடிவுகள் வெளியாவதறகு முன்பே கிரியேட் செய்யப்பட்டு யாவும் தயாராக வைக்கப்பட்டிருந்தது இந்த வெப்சைட்.

செவ்வாய்க்கிழமை தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது, ராம்னி ஜெயித்திருப்பார். புதன்கிழமை காலை இந்த வெப்சைட் இன்டர்நெட்டில் ‘லைவ்’வாக போகவேண்டும் என்று திட்டமிட்டு இருந்தார்கள். அதன்படி, தேதியும் செட் பண்ணப்பட்டு இருந்தது வெப்சைட்.

தேர்தல் முடிவுகள் வெளியாகி, ராம்னி ஜெயிக்கவில்லை என்றானபோது, உடனடியாக இந்த வெப்சைட் வெளியாவதை நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால், அப்படி செய்ய தவறி விட்டனர் அவரது உதவியாளர்கள். இதனால், புதன்கிழமை காலை திட்டமிட்டபடி வெப்சைட் ‘லைவ்’வாக இன்டர்நெட்டில் போகத் தொடங்கியது.

சுமார் 5 நிமிடங்களில் தமது தவறை உணர்ந்துகொண்டு, வெப்சைட்டை முடக்கி விட்டார்கள் ராம்னியின் உதவியாளர்கள். ஆனால், தற்போதைய இன்டர்நெட் உலகத்தில் அந்த 5 நிமிடங்கள் போதுமே… வெப்சைட்டின் பக்கங்கள் ஸ்கிரீன் ஷாட்டாக பிரதிபண்ணப்பட்டு விட்டன.

இப்படி தற்செயலாக லீக் ஆகிப்போன ‘ஜனாதிபதி ராம்னி வெப்சைட்டில்’ இருந்து சுவாரசியமான 4 பக்கங்களை தருகிறோம்.


இதுதான் ஜனாதிபதியின் வெப்சைட்டின் முகப்பு பக்கம். அதாவது, ஹோம் பேஜ்.  “I’m excited about our prospects as a nation. My priority is putting people back to work in America” என்கிறார் ராம்னி இந்தப் பக்கத்தில். மேலே ஜனாதிபதியின் கையொப்பமும் உள்ளது. அற்புதமான நாட்டை உருவாக்குவதற்கு அமெரிக்கர்களுக்கு வாக்குறுதி கொடுக்கும் பக்கம் இது.



 
கீழேயுள்ள போட்டோ, மேலே அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகியோரின் போட்டோக்களுடன், ஜனாதிபதி ராம்னி பதவியேற்கும் வைபவம் பற்றி விளக்கம் கொடுக்கிறது. பதவிப் பிரமாணம் செய்வது முதற்கொண்டு, நடைபெறவுள்ள சடங்குகள் பற்றிய திட்டங்கள் விளக்கப்பட்டுள்ளன.



 
 
இந்த போட்டோவில், ராம்னி புதிதாக நியமிக்கும் அமைச்சர்கள், செயலாளர்கள் யார்யார் என்ற விபரங்களை கூற திட்டமிடப்பட்ட பக்கம் உள்ளது. நல்லவேளையாக அமைச்சர்கள், அதிகாரிகளின் பெயர்கள் அப்டேட் செய்யப்பட்டிருக்கவில்லை. ஓரிரு பெயர்களையாவது, ராம்னி ஜெயித்தவுடன் அப்டேட் செய்ய தயாராக வைத்திருப்பார்கள் போலிருக்கிறது.



 
 
இந்த போட்டோவில் இருப்பது, ‘ஜனாதிபதி ராம்னி’ நிர்வாகத்தில் நீங்கள் இணைந்துகொள்ள விரும்பினால், பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பக்கம். இதிலுள்ள சிவப்பு பட்டனை அழுத்தி, உங்கள் résuméயை இணைத்தால், தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவதற்கான ஏற்பாடு இது!

நம்ம பா.ம.க. ராமதாஸே தமிழகத்தில் அடுத்து ஆட்சியை பிடிக்கப்போவது நாமே என்று சீரியசாக கூறிவரும் நிலையில், ராம்னி அமெரிக்க ஜனாதிபதியாவேன் என நம்பியதில் என்ன தப்பு?

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!