Thursday, November 8, 2012

பிரதிபா கப்பலின் என்ஜினை இயக்கும் முயற்சி வெற்றி : இழுக்கும் முயற்சி தோல்வி


பிரதிபா கப்பலின் என்ஜினை இயக்கும் முயற்சி வெற்றி : இழுக்கும் முயற்சி தோல்வி




நிலம் புயலால் சென்னையில் தரைதட்டிய பிரதிபா காவேரி கப்பலின் என்ஜினை இயக்கும் முயற்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக பிரதிபா காவேரி கப்பலை கடலுக்குள் இழுக்க பயன்படுத்தப்பட்ட ராட்சத கயிறு அறுந்தது. பிரதிபா கப்பலை இழுக்க ராட்சத கயிறானது மாளவிகா இழுவை கப்பலுடன் இணைக்கப்பட்டது. அந்த சமயத்தில் கப்பல் லேசாக நகர்ந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக ராட்சத கயிறு அறுந்ததால் மீட்புக் குழுவினர் கடும் அதிர்ச்சியடைந்தனர். ராட்சத கயிறு அறுந்த சத்தம் கடற்கரையில் கூடியிருந்த பொதுமக்களுக்கு கேட்டது குறிப்பிடத்தக்கது.

பிரதிபா கப்பல் என்ஜின் இயங்கியது


பிரதிபா காவேரி கப்பல் என்ஜினை இயக்கும் முயற்சி வெற்றி பெற்றுள்ளது. வெளிநாட்டு பொறியாளர்கள் இரண்டு நாட்களாக போராடி என்ஜினை இயக்கியுள்ளனர். என்ஜின் இயங்குவதால் கப்பலை கடலுக்குள் சென்று விட்டுவிடலாம் என்று மீட்புக்குழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!