Wednesday, November 7, 2012

நாற்பதுக்கு முன் புகைப்பதைக் கைவிடுவது வாழ்நாளை அதிகரிக்கிறது

நாற்பதுக்கு முன் புகைப்பதைக் கைவிடுவது வாழ்நாளை அதிகரிக்கிறது




புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் நாற்பது வயதுக்கு முன்பாகவே அப்பழக்கத்தை கைவிடுகிறார்கள் என்றால், தமது ஆயுட்காலத்தை அவர்கள் கணிசமான அளவில் அதிகரித்துக்கொள்கிறார்கள் என்பதற்கு புதிய ஆதாரம் கிடைத்துள்ளது.

பிரிட்டனில் பத்து லட்சம் பெண்களிடையே நடத்தப்பட்ட ஓர் ஆய்வு, புகைப் பழக்கத்தை நாற்பது வயதுக்கு முன்பாக கைவிட்டவர்கள், தொடர்ந்து புகைப்பவர்களை விட சராசரியாக ஒன்பது ஆண்டுகள் அதிகமாக வாழ்கிறார்கள் என்று கூறுகிறது.

மருத்துவ சஞ்சிகையான தி லான்செட்டில் இந்த ஆய்வின் முடிவுகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆய்வு பெண்களிடையேசெய்யப்பட்டிருந்தாலும், ஆண்களுக்கும் இந்த முடிவு அதே அளவில் பொருந்தும் என்று ஆய்வுக்கு தலைமையேற்றிருந்த ஒக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சர் ரிச்சர்ட் பெட்டோ கூறுகிறார்.
எப்போதுமே புகை பிடிக்காமல் இருப்பதுதான் ஆரோக்கிய வாழ்க்கைக்கு மேலும் உகந்தது என்பதை அவர் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!