Friday, June 7, 2013

மாளிகைல குடியிருக்கிற நீ பிச்சைக்காரனா..?: பிச்சையெடுக்க தடை விதித்த அரசு

மாளிகைல குடியிருக்கிற நீ பிச்சைக்காரனா..?: பிச்சையெடுக்க தடை விதித்த அரசு


லண்டனில் உள்ள வங்கி வாசலில் தனமும் பிச்சையெடுக்கும் ஒருவருக்கு மாளிகை போன்ர வீடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதனால், அவர் தொடர்ந்து பிச்சையெடுக்க தடையுத்தரவு போட்டுள்ளது நீதிமன்றம்.

லண்டனில் உள்ள நாட்வெஸ்ட் வங்கியின் முன்பு அமர்ந்து, பிச்சையெடுப்பவர் 37 வயதான சீமன் விரைட் என்ற பிச்சைக்காரர். இதன்மூலம் நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 300 டாலர் வரை வருமானம் கிடைத்து வந்துள்ளது.

தினமும் மாலையில் பணி முடிந்ததும், புல்ஹாம் தெருவில் உள்ள தனது மாளிகை போன்ற வீட்டிற்கு சென்று விடுவாராம் சீமன். அவருடைய மாளிகை போன்ற வீட்டின் மதிப்பு சுமார் டாலர் 300,000 ஆகும்.

வழக்கம்போல, சில நாட்களுக்கு முன் பிச்சையெடுத்துக்கொண்டிருந்த சீமனுக்கு, மாளிகை வீடு இருப்பதை அறிந்த பொதுநல விரும்பி ஒருவர் , சீமன் மீது லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

வழக்கின் சாராம்சம் இது தான், ‘மிகவும் வசதியாக இருந்து கொண்டு பொதுமக்களிடம் பொய்கூறி பிச்சையெடுக்கும் இவரை உடனே அகற்ற வேண்டும்'. விசாரணையில் சீமனுக்கு மாளிகை வீடு இருப்பது உறுதியானதால், அவர் தொடர்ந்து பிச்சையெடுப்பதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார் வழக்கை விசாரித்த நீதிபதி.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!