Friday, November 9, 2012

சாண்டியை அடுத்து நியூயார்க் ய் தாக்கிய பனிப்புயல்

நியூயார்க்கை தாக்கியது பனிப்புயல்! தரையில் 12 இன்ச் ஸ்நோ!! மின்சாரம், விமானங்கள் இல்லை!!! - படங்கள் இணைப்பு

 

சூறாவளி சான்டி வந்து ஒரு புரட்டு புரட்டிவிட்டு சென்ற நியூயார்க் மற்றும் நியூஜெர்சி பகுதிகளை நேற்று இரவு தாக்கத் தொடங்கிய பனிப்புயல் தற்போதும் நீடிக்கிறது. நேற்றும், இன்றுமாக (புதன், வியாழன்) இதுவரை 1,700 விமானங்கள், கேன்சலாகியுள்ளன. சில இடங்களில் 12 இன்ச் அளவுக்கு ஸ்நோ தரையை மூடியுள்ளது.

ஆயிரக் கணக்கான வீடுகள், மற்றும் வர்த்தக நிலையங்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. கடந்த இரண்டு வாரங்களுக்குள் 2-வது தடவையாக பலர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 60,000 வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மின்சாரத்தை இழந்துள்ளன.

நியூயார்க்கின் லாங்-ஐலேன்ட் ரயில்பாதை முழுமையாக ஸ்நோவால் மூடப்பட்டுள்ளது. இந்தப் பாதையில்தான், அமெரிக்காவின் மிகப்பெரிய கம்யூட்டர் ரயில் சேவை இயங்குகிறது. லாங்-ஐலேன்ட் ரயில்பாதையில் ஓடும் அனைத்து ரயில்களும் கேன்சல் செய்யப்பட்டுள்ளன.

சான்டி சூறாவளி அளவுக்கு வேகமான காற்று இல்லை என்றபோதிலும், கிட்டத்தட்ட மணிக்கு 85 கி.மீ. வேகத்தில் காற்று வீசுகிறது. ஆனால், சான்டி சூறாவளியைவிட நிலைமை மோசமாக இருப்பதற்கு காரணம், இப்போது, காற்றுடன் பனிப்பொழிவும் சேர்ந்துள்ளது. பனிப்பொழிவு தொடர்ந்து நடப்பதால், தரை மூடப்பட்டு, வீதிகளில் உள்ள வாகனங்களும் மூடப்படும் நிலைமை.

உயரம் குறைவான பகுதிகளில் வசிப்பவர்களை வீடுகளில் இருந்து வெளியேறுமாறு போலீஸ் லவுட் ஸ்பீகக்கரில் அறிவித்தபடி உள்ளனர். மரங்கள் விழும் அபாயம் உள்ளதான் பார்க்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. வீதிப் போக்குவரத்துக்கு லாங்-ஐலேன்ட் எக்ஸ்பிரஸ்வே, இரு திசை போக்குவரத்துக்கும் மூடப்பட்டுள்ளது. வீதியில் ஐஸ் படிந்து வழுக்குவதே காரணம்.

சான்டி புயலின் பாதிப்பில் இருந்து தற்போதுதான் மீண்டு, அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கொண்டாட்டங்களில் ஈடுபட்ட நியூயார்க், மற்றும் நியூஜெர்சி மக்கள், மற்றொரு கடுமையான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இந்தத் தொகுப்பில் உள்ள போட்டோக்கள், நேற்றும் இன்றும் அங்குள்ள நிலைமையை காட்டக்கூடியவை.














































No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!