Thursday, November 8, 2012

பிரதிபா காவேரி கப்பலை மாலை 3 மணிக்கு இழுக்க முடிவு... முயற்சி வெற்றி பெறுமா?

பிரதிபா காவேரி கப்பலை மாலை 3 மணிக்கு இழுக்க முடிவு... முயற்சி வெற்றி பெறுமா?




நிலம் புயலால் கடந்த 8 தினங்களாக கரை ஒதுங்கியுள்ள பிரதிபா காவேரி கப்பலை இழுக்க, இழுவைக் கப்பலான மாளவியா தரைதட்டிய கப்பலில் இருந்து 2 கி.மீ தூரத்தில் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் ரத்னா இழுவைக் கப்பல் சென்னை துறைமுக எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளது.

மாளவியா முயற்சி தோல்வி


முன்னதாக, தரைதட்டிய பிரதிபாவை மாளவியா மூலம் கடலுக்குள் இழுக்கும் முயற்சியும் தோல்வி அடைந்துள்ளது. நேற்றிரவு ராட்சத கயிறை கட்டி பிரதிபாவை இழுத்த மாளவியா முயற்சிக்கும் ஏமாற்றம் கிடைத்தது. 6 அடி ஆழத்தில் தரைதட்டியுள்ள பிரதிபாவை அசைக்க கூடு முடியாததால் மீட்பு- பணி ஒத்திவைக்கப்பட்டது.

ரத்னா உதவியுடன் கப்பலை இழுக்க முயற்சி


இதனையடுத்து, ரத்னா இழுவை கப்பல் உதவியுடன், மாளவியா இழுவை கப்பலும் இணைந்து, பிரதிபா காவேரி கப்பலை இழுக்கும் முயற்சி மாலை 3 மணிக்கு நடைபெறும் என அறவிக்கப்பட்டுள்ளது.

முயற்சி தோல்வி அடைந்தால் அமாவாசை நாளில் இழுக்க முடிவு


பிரதிபா காவேரி கப்பல் இழுக்கும் முயற்சி இன்றும் தோல்வி பெறும் பட்சத்தில் அமாவாசை நாளான 13ந் தேதி அன்று கடலில் நீர்ப் பெருக்கு காணப்படும் என எதிர்பார்க்கபடுகிறது. அப்படி நீர் மட்டம் உயர்ந்திருந்தால் மீட்புப் பணி எளிதாக இருக்கம் என அதிகாரிகள் கருத்து தெரிவித்தள்ளனர்.

கப்பல் மீட்புப் பணி பார்க்க மக்கள் கூட்டம்


இதனையடுத்து இன்று மாலை 3 மணிக்கும் நடக்கும் மீட்பு பணியை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் கூடியுள்ளனர். அதுமட்டுமின்றி, பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் மீட்பு பணியை கூடியுள்ளனர்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!