Monday, November 5, 2012

அமெரிக்காவில் நாளை வாக்குபதிவு: வாக்குசாவடிகளாக மாறிய இராணுவ வாகனங்கள்

அமெரிக்காவில் நாளை வாக்குபதிவு: வாக்குசாவடிகளாக மாறிய இராணுவ வாகனங்கள்




அமெரிக்காவில் நாளை ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தீவிரமாக பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அமெரிக்காவில் நாளை ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பல பகுதிகள் சான்டி புயலால் பாதிக்கப்பட்டுள்ளதால், இராணுவ வாகனங்கள் வாக்குசாவடிகளாக பயன்படுத்தப்பட உள்ளன.

இதுகுறித்து நியூஜெர்ஸி மாகாண லெப்டினன்ட் ஆளுநர் கிம் குவாடாக்னோ கூறுகையில், சான்டி புயலின் காரணமாக ஜனாதிபதி தேர்தல் சவால் நிறைந்ததாக மாறியுள்ளது. இம் மாகாண மக்கள் வாக்குபதிவை இரண்டாம் பட்சமாக கருதுகின்றனர்.

இதனையடுத்து அமெரிக்க ஜனாதிபதியால் ஆளுநருக்கு கொடுக்கப்பட்ட இராணுவ வாகனங்கள் உட்பட அனைத்து உடைமைகளும் தேர்தலுக்காகப் பயன்படுத்தப்படும்.

இராணுவ டிரக்குகளில், வாக்குப்பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களில் "வாக்குப்பதிவு செய்யலாம்" எனக் குறிப்பிடப்பட்டிருக்கும்.

நிவாரண முகாம்களில் உள்ள மக்களிடம் வாக்குச் சீட்டு முறையில், வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!