Monday, November 5, 2012

ஆணாக மாறியவருக்கு தந்தை அந்தஸ்து கிடையாது: ஜப்பானிய நீதிமன்றம்

ஆணாக மாறியவருக்கு தந்தை அந்தஸ்து கிடையாது: ஜப்பானிய நீதிமன்றம்






ஜப்பானில் பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவருக்கு தந்தை அந்தஸ்து வழங்கப்பட மாட்டது என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
30 வயது மிக்க இந்த நபர், ஆணாக மாறி ஒரு பெண்ணை திருமணம் செய்தார்.

இதையடுத்து உயிரணு தானம் மூலம் கடந்த 2009ம் ஆண்டு ஒரு குழந்தையை அவரது மனைவி பெற்றெடுத்தார்.

இந்நிலையில் அந்த குழந்தைக்கு தந்தை என தனது பெயரை பதிவு செய்ய சென்ற போது அரசு மறுத்து விட்டது.

எனவே, அதை எதிர்த்து அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு கூறப்பட்டதில், பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய நபருக்கு தந்தை என்ற அந்தஸ்து வழங்க முடியாது.

ஏனெனில் உடல் ரீதியாக அவரால் ஒரு குழந்தையை உருவாக்க கூடிய திறன் இல்லை.

வேறு ஒருவரின் மூலமே அவரது மனைவியால் குழந்தை பெற முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!