Friday, September 7, 2012

ரூ.18 கோடிக்கு ஏலம் போன காட்டெருமை


ரூ.18 கோடிக்கு ஏலம் போன காட்டெருமை




தென் ஆப்ரிக்காவில் கொரிஷான் என்ற காட்டெருமை ஒன்று ரூ.18 கோடிக்கு ஏலம் போனது.

தென் ஆப்ரிக்காவில் பிரடோரியா பகுதியில் உள்ள பெலா பெலா என்ற இடத்தை சேர்ந்தவர் ஜேக்குயஸ் மலான். இவரது பண்ணையில் கொரிஷான் என்ற ஆண் காட்டெருமை ஒன்று இருந்தது. இந்த எருமைக்கு 4 வயது 10 மாதம் ஆகிறது.

அபூர்வ வகை இன காட்டெருமையான இதன் கொம்புகள் 1.3 மீற்றர் நீளமும், 41 சென்டி மீற்றர் அகலமும் கொண்டது.

தென் ஆப்ரிக்காவின் பிரசித்தி பெற்ற இந்த காட்டெருமை இனத்தை முன்பு வேட்டையாடி அழித்து விட்டனர்.

தற்போது அவரது பண்ணையில் மீண்டும் இந்த இன காட்டெருமை உருவாகி உள்ளது. இதன் மூலம் இனப்பெருக்கம் செய்து மீண்டும் அபூர்வரக காட்டெருமையை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காகத்தான் இந்த ஆண் காட்டெருமை அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு சென்ட்லா என்ற காட்டெருமை ரூ.6 கோடிக்கு ஏலம் போனது சாதனையாக கருதப்பட்டது. தற்போது அதை கொரிஷான் முறியடித்துள்ளது.

2 comments:

  1. Enga teacher apavae sonanga ne maadu meika layaku.nu nadan avanga pecha madikala ipa inda newsa patadum rombavae feel panran

    ReplyDelete
    Replies
    1. ஆஹா ... நல்ல காலம் மாடுகளாவது தப்பித்தது LoL
      வாழ்த்துக்கள் அன்பரே ... தொடர்ந்து இணைந்திருங்கள்

      Delete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!