Wednesday, January 16, 2013

பூமியும், சூரியனும் அருகருகே வந்த நிகழ்வு : பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்

பூமியும், சூரியனும் அருகருகே வந்த நிகழ்வு : பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்




கோள்கள் சுற்றும்போது மற்ற கோள்கள் அருகே வரும் அபூர்வ நிகழ்வுகள் அவ்வபோது நடப்பது வழக்கம். இந்த சுழற்சியில் ஜனவரி மாதத்தில் பூமியானது, சூரியனுக்கு மிக அருகிலும் ஜூலை மாதத்தில் வெகுதூரத்துக்கும் செல்லும். அந்த வகையில் சூரியனுக்கு மிக அருகில் பூமி வரும் நிகழ்வு இன்று காலை 10.10 மணிக்கு நடந்தது. பூமியிலிருந்து 147 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தில் சூரியன் இருந்தது. இதனால் சீதோஷ்ண நிலையில் சிறிது மாற்றம் தென்பட்டது. இந்த நிகழ்வை கோளரங்கத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு ஏற்பாடுகள் மூலம் பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.

பிர்லா கோளரங்க செயல் இயக்குனர் அய்யம்பெருமாள் கூறுகையில், 'சூரியனை நீள்வட்ட பாதையில் பூமி சுற்றி வருகிறது. இன்று சூரியனுக்கு அருகில் அதாவது 14.7 கோடி கி.மீ. அருகில் பூமி சுற்றி வரும். அதேபோல, வரும் ஜூலை 2ம் தேதியன்று சூரியனுக்கு 15.4 கி.மீ. அருகில் பூமி சுற்றி வரும். இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றார்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!