Friday, January 18, 2013

போடியில் பறக்குது வெள்ளை காக்கா

போடியில் பறக்குது வெள்ளை காக்கா



போடியில் வலம் வரும் வெள்ளை நிற காகத்தை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.  ‘வெள்ளை காக்கா மல்லாக்க பறக்குது... சிவப்பு யானை பல்லாக்கு தூக்குது...’ என்று பழைய பாடல் ஒன்று உண்டு. சினிமா பாடலுக்காக கிண்டலாக எழுதப்பட்டாலும், அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வெள்ளை நிற காகங்கள் உள்ளதாக இணையதளங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் கூட கேரளாவில் சில காகங்கள் வெள்ளை நிறத்தில் திரிவதாக கூறுகின்றனர்.

மனித இனத்தில் அடர்த்தியான வெண்மை நிறத்தில் பிறப்பவர்களை ‘அல்பினோ பேபி’ என்று கூறுகிறோமே, அதைப்போல பறவை, விலங்கினத்திலும் இது போன்ற வெண்மை நிற குறைபாடுகள் உள்ளன. தேனி மாவட்டம் போடி, வஉசி நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக வெள்ளை நிறத்தில் ஒரு காகம் வலம் வருகிறது. இதனால் வேகமாக பறக்க முடியாத காரணத்தால், பிற காகங்கள் இதற்காக இரை தேடி வந்து தருகின்றன. முழுமையான வெண்மையின்றி ஆங்காங்கே கருப்பு நிறத்துடனும் காணப்படுகிறது.

சற்று மந்தத்தன்மையுடன் காணப்படுவதால், இது குறைபாடுள்ள காகமாக கூட இருக்கலாம். ஒருவேளை அரிய வகை காகமாக இருந்தால், வனத்துறையினர் இதை பாதுகாக்கலாம் என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ‘வெள்ளை காக்கா... வெள்ளை காக்கா’ என்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த அதிசய காகத்தை பார்த்து ஆச்சரியப்படுகின்றனர்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!