Monday, January 14, 2013

பேஸ்புக்கில் வி.ஐ.பி.களுக்கு மெசேஜ் அனுப்பலாம்.. 100 டாலர்

பேஸ்புக்கில் வி.ஐ.பி.களுக்கு மெசேஜ் அனுப்பலாம்.. 100 டாலர் செலவாகும், ஓகேவா?




சமூக வலைத்தளம் பேஸ்புக், தமது உறுப்பினர்களிடம் இருந்து பணம் சம்பாதிக்க புதியதொரு திட்டத்தை முயற்சி செய்ய தொடங்கியுள்ளது. இதன்படி, வி.ஐ.பி.களின் பார்வைக்கு செல்லும் விதத்தில் மெசேஜ் அனுப்ப அதிகபட்ச கட்டணம் 100 டாலர் வசூலிக்கப்படவுள்ளது. தற்போது, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூக்கர்பர்க்குக்கு நேரடியாக மெசேஜ் அனுப்ப 100 டாலர் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய திட்டம் இன்னமும் அறிவிக்கப்படவில்லை, தற்செயலாக வெளியே தெரியவந்துள்ளது. மாஷபிள் மீடியா (ஸ்காட்டிஷ் அமெரிக்கன் செய்தி மீடியா) நிருபர் கிரிஸ் டெயிலர், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூக்கர்பர்க்குக்கு மெசேஜ் ஒன்றை அனுப்ப முயன்றபோது, அவருக்கு இந்த பணம் கொடுக்கும் ஆப்ஷன் திரையில் வந்தது. (கீழேயுள்ள போட்டோ பார்க்கவும்)

அதன்படி, 100 டாலர் பணம் கொடுத்தால், மெசேஜ் நேரடியாக மார்க் பார்வைக்கு போகும். இலவசமாக அனுப்பினால், ‘வேறு ஃபோல்டருக்கு’ போய்ச் சேரும் என்று தெரியவந்தது. ‘வேறு ஃபோல்டருக்கு’ போவது என்பது, குப்பைக்கூடைக்குள் போவதற்கு சமானம்!

இதையடுத்து மாஷபிள் மீடியா நிருபர் கிரிஸ் டெயிலர், பேஸ்புக் தலைமை அலுவலக செய்தித் தொடர்பாளரை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, இந்த புதிய திட்டம் பற்றிய தகவல் தெரியவந்தது. இதன்படி, அனைத்து வி.ஐ.பி.க்களுக்கும் மெசேஜ் அனுப்ப 100 டாலர் கட்டணம் கிடையாது. வி.ஐ.பி.யின் பிரபலத்தை பொறுத்து கட்டணம், 10 டாலரில் இருந்து 100 டாலர் வரை இருக்குமாம்.

பேஸ்புக், நடப்பு (2013-ம்) ஆண்டின் வருமானத்தை அதிகரிக்க இந்த புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாக தெரிகிறது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!