Tuesday, January 15, 2013

யுனைட்டட் ஏர்லைன்ஸூக்கு அமெரிக்க கிராமம் ஒன்றில் உள்ள மர்ம ஆபீஸ்!

யுனைட்டட் ஏர்லைன்ஸூக்கு அமெரிக்க கிராமம் ஒன்றில் உள்ள மர்ம ஆபீஸ்!



அமெரிக்காவின் யுனைட்டட் ஏர்லைன்ஸ், சின்னஞ்சிறு கிராமம் ஒன்றில், ஒரு கம்ப்யூட்டர்கூட இல்லாத ‘நிழலான’ அலுவலகம் என்றை நடத்தி வருவது குறித்து, அமெரிக்க போக்குவரத்து ஏஜென்சி இன்று விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அப்படி என்னதான் செய்கிறார்கள் அந்த குட்டி அலுவலகத்தில்?

ஒரேயொரு பகுதிநேர ஊழியர் மட்டும் பணிபுரியும் அந்த அலுவலகம்தான், அமெரிக்காவின் மிகப்பெரிய விமான நிறுவனம் யுனைட்டட் ஏர்லென்ஸின் விமானங்களுக்கு 500 மில்லியன் டாலர் எரிபொருளை வாங்குகிறது!

விவகாரம் என்னவென்றால், சைக்கமோர் என்ற கிராமத்தில் (அல்லது சிறுநகரம்) எரிபொருளுக்கு செலுத்த வேண்டிய வரி குறைவு. யுனைட்டட்டின் தலைமைச் செயலகம் உள்ள சிக்காகோ நகரில் எரிபொருள் வாங்கும்போது கட்டவேண்டிய வரியை விட, வருடத்துக்கு சில மில்லியன் டாலர் குறைவான வரியை இங்கே கட்டுகிறது யுனைட்டட்.

இந்த விவகாரத்தை தெரிந்துகொண்ட அமெரிக்க போக்குவரத்து ஏஜென்சி, குறிப்பிட்ட அலுவலகத்துக்கு சென்றபோது, அலுவலகம் பூட்டியிருந்தது. உள்ளே எட்டிப் பார்த்தால், 500 மில்லியன் டாலர் வர்த்தகம் நடக்கும் அலுவலகத்தில் ஒரேயொரு மேஜை மட்டும் உள்ளது. ஒரு கம்ப்யூட்டர்கூட இல்லை. பகுதிநேர ஊழியர் லீவு.

யுனைட்டட் ஏர்லைன்ஸ் என்ன சொல்கிறது? “நாம் அமெரிக்காவில் எங்கு வேண்டுமானாலும் அலுவலகம் அமைக்கலாம். அலுவலகம் எந்த சைஸிலும் இருக்கலாம். அலுவலகம் உள்ள இடத்தில் எவ்வளவு வரிவிதிப்போ, அதைத்தான் செலுத்த வேண்டும். இது ஒன்றும் சட்டவிரோதம் கிடையாதே”

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!