Friday, October 26, 2012

தேச துரோகத்திற்கு எதிராக புதிய சட்டம் ரஷ்யாவில் நிறைவேற்றம்


தேச துரோகத்திற்கு எதிராக புதிய சட்டம் ரஷ்யாவில் நிறைவேற்றம்





சதித்திட்டம் மற்றும் துரோகத்திற்கு எதிராக புதியச் சட்டத்தினை தனது கீழ் சபையில் ரஷ்யா நிறைவேற்றியுள்ளது.
மேல் சபையில் நிறைவேறவுள்ள இந்த புதிய சட்டத்தின் மூலம் கிடைக்கும் சாட்சிகளை பொறுத்து, மரணதண்டனையோ அல்லது அதற்கேற்ற தண்டனையோ குற்றவாளிக்கு வழங்கலாம்.

இந்த சட்டம் குறித்து ஐரோப்பிய யூனியன் கவலை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், இந்த சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள படி தண்டனை வழங்குவது என்பது கொஞ்சம் கடினமாக இருக்கும்.

இதன் மூலம் வெளிநாட்டவரையும் 20 வருடங்கள் வரை கடுமையாக தண்டிக்கலாம். பன்னாட்டு பொதுமன்னிப்பு நிறுவனம் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவற்றுடனான செய்தி பறிமாற்றத்தையும் இந்த சட்டத்தின் மூலம் குற்றமாக்க முடியும்.

இந்த சட்டம் பொதுமக்களின் முன்னேற்றத்தை கட்டுப்படுத்தி அவர்களுக்கு மன அழுத்தத்தை அதிமாக்கும்.

மேலும் இந்த சட்டத்தின் மூலம் வெளிநாட்டு நிறுவனங்களுடன் நிதித் தொடர்பு வைத்துள்ளவர்களை குற்றவாளிகள் என்றும், நாட்டுக்கு எதிராக செய்திகள் வெளியிடும் வலைதளங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!