Friday, January 18, 2013

இங்கிலாந்தில் 6 லட்சம் பேர் ‘ஃபேஸ் புக்’லிருந்து விலகல்!

இங்கிலாந்தில் 6 லட்சம் பேர் ‘ஃபேஸ் புக்’லிருந்து விலகல்!


ஃபேஸ்புக் பயனாளர்களின் சொந்தத் தகவல்கள் அதிக அளவில் வேறு பயனாளர்களால் திருடப்படுகிறது. தவிர அவை வர்த்தக நோக்கில் விலை பேசப்படுவதும் அதிகரித்துள்ளது. இதனால் தங்களின் ரகசியங்கள் பறிபோவதாக ஃபேஸ்புக் பயனாளர்கள் கருதுவதாலும் அவர்கள் ஃபேஸ்புக்கில் இருந்து வெளியேறியுள்ளனர். மேலும் போர் அடித்துப் போயும் பலர் விலகியுள்ளனர்.

இங்கிலாந்தில் மட்டும் சுமார் 6 லட்சம் ஃபேஸ்புக் பயனாளர்கள் பேஸ்புக் தளத்தில் இருந்து விலகி வருவதால், பேஸ்புக் தன் பயனாளர்களில் 2.88 சதவீதத்தை இழந்துவிட்டது. சோஷியல் பேங்கர்ஸ் என்ற அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இது தவிர நண்பர்கள் எண்ணிக்கை அதிகரிப்பில் கட்டுப்பாடு உள்ளிட்டவையும் ஃபேஸ்புக் தளத்தில் இருந்து பயனர்கள் விலகக் காரணமாக அமைவதாக டெய்லி மெயில் பத்திரிகை தெரிவித்துள்ளது.


 ஃபேஸ்புக் மறுப்பு 

ஃபேஸ்புக் தளத்தில் இங்கிலாந்து ஊடகத் தொடர்பாளர் இந்த தகவலை மறுத்துள்ளார். ஃபேஸ்புக்கின் வளர்ச்சியில் மக்கள் தங்களை எப்போதும் அதில் இணைத்துக் கொண்டிருப்பதன் மூலம் வெளிப்படுத்துகின்றனர். ஃபேஸ்புக் பயனர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஒவ்வொரு நாளும் ஃபேஸ்புக் தளத்தில் லாக் ஆன் செய்கின்றனர். இங்கிலாந்து உலகின் ஆறாவது அதிகபட்ச ஃபேஸ்புக் பயனாளர்கள் இருக்கும் நாடு. டிசம்பரில் மட்டும் 33 மில்லியன் தனிநபர் பயனர்கள் அதிகரித்துள்ளனர்" என்று அவர் கூறியுள்ளார்

இந்தியாவில் 63 மில்லியன் 

மேலும் அமெரிக்காவில் 169 மில்லியன் பயனர்கள் ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வருகின்றனர். அடுத்ததாக பிரேசிலில் 65 மில்லியன் பேரும், இந்தியாவில் 63 மில்லியன் பேரும் மாதந்தோறும் அதிகரித்து வருகின்றனர். சந்தை பயன்பாட்டில் அமெரிக்காவின் 54 சதத்துக்கு அடுத்து பிரிட்டன் தான் 53 சதமாக உள்ளது என்று ஊடகத் தொடர்பாளர் கூறியுள்ளார்.


அதிக அளவு விளம்பரம் 


ஃபேஸ்புக் தனது பயனாளர்களை மீண்டும் பெற வேண்டுமானால், அது தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும். மேலும் ஃபேஸ்புக்கில் காணப்படும் விளம்பரங்கள் பலரை எரிச்சல் அடையச் செய்துள்ளன' என்று கூறியுள்ளார் ஸ்டூயர்ட் மைல்ஸ் என்பவர்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!