Tuesday, January 29, 2013

தொலைந்து போன வாலிபரின் ரத்தத்தை உறிஞ்சிய அட்டைப் பூச்சிகள்

தொலைந்து போன வாலிபரின் ரத்தத்தை உறிஞ்சிய அட்டைப் பூச்சிகள்



அவுஸ்திரேலியாவில் 18 வயதான மேத்யூ ஆலன் என்ற வாலிபர் ஒருவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு காணாமல் போனார்.
வீட்டாரும் பொலிசாரும் தேடிப்பார்த்தும் அவனைக் கண்டுபிடிக்க இயலவில்லை. இவர் தனது அலைபேசி, வங்கி அட்டை போன்ற எதையும் எடுத்துச் செல்லாததால் அவரைக் கண்டுபிடிப்பது பெரும் சிரமமாக இருந்தது.

இந்நிலையில் காட்டுப்பகுதியில் மலையேறச் சென்ற இருவர் சனிக்கிழமையன்று வெஸ்ட்லே காடுகளுக்குள் ஓர் வாலிபர் இருப்பதாக பொலிசாருக்குத் தகவல் கொடுத்தனர். உடனே பொலிஸ் படை அங்கு விரைந்தது.

புதர்கள் மண்டிய காட்டுப்பகுதிக்குள் சென்று பொலிசார் தேடியபோது அங்கு ஒரு வாலிபர் உருக்குலைந்த நிலையில் உடல் மெலிந்து, கால்களில் புண்களுடன் ஓரிடத்தில் போக வழி தெரியாமல் சிக்கியிருப்பதைப் பார்த்தனர்.

அருகில் சென்று பார்த்த போது அவர் உடலெங்கும் அட்டைப்பூச்சிகள் அப்பிக் கிடந்தன. அவை அவரது ரத்தத்தை உறிஞ்சி அவரை மெலியச் செய்துவிட்டன.

கொசுக்கடியால் அவர் உடல் விகாரமாகத் தோன்றியது. ஒன்பது வாரங்களாக அவன் அந்த மலைப்பகுதியில் ஓடிய ஓடைநீரைக் குடித்தபடி இருந்திருக்கிறார்.

அந்த நீரும் வற்றிவிட்ட நிலையில் அவரது உடல் வாடிவிட்டது. நாவும் வறண்டு விட்டது. அவரது உடலில் 50 சதவீதம் எடை குறைந்துவிட்டது. கண்களும் இருண்டுவிட்டன.

அவரைப் பொலிசார் மீட்டுவந்து மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் உடல் சற்றுத் தேறியதும் அவர் அங்கு சென்றது ஏன், எப்படி, எதற்கு என்று விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!