Wednesday, January 30, 2013

பிக்மி எனப்படும் பத்து சிற்றானைகள் விஷம் தின்று சாவு

பிக்மி எனப்படும் பத்து சிற்றானைகள் விஷம் தின்று சாவு



”பிக்மி” என்று அழைக்கப்படும் வெறும் 8 அடி உயரம் கொண்ட இந்த சிற்றானைகள் உலகில் அழிந்து வரும் உயிரினங்களுள் ஒன்றாகும். இவை மலேசியக் காடுகளில் அதிகமாக காணப்படுகின்றன.

கடந்த செவ்வாய்க்கிழமை பத்து சிற்றானைகள் விஷம் தின்று இறந்து கிடந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏழு பெண் யானைகளும், 3 ஆண் யானைகளும் வயிறு மற்றும் குடல் பகுதியில் புண், மோசமான ரத்தக்கசிவு ஆகிய காரணங்களால் இறந்து போனதாக இவற்றின் சவப் பரிசோதனை அறிக்கை தெரிவித்துள்ளது.

இவை தம்மை அறியாமல் விஷப்புல் பூண்டுகளைத் தின்றனவா அல்லது யாரேனும் திட்டமிட்டே விஷம் வைத்துக் கொன்றார்களா என்று விசாரணை நடைபெற்று வருவதாக வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மூன்று மாத சிற்றானைக் குட்டி மட்டும் இறந்து கிடந்த தனது தாயை விழிக்க வைக்க அரும்பாடுபட்டுக் கொண்டிருந்தது. அந்தக் குட்டியை வனத்துறையினர் மீட்டுள்ளனர்.

திட்டமிட்ட படுகொலையாக இருந்தால் கொலைகாரர்கள் உறுதியாகத் தண்டிக்கப்படுவார்கள். எனினும் பரிசோதனைக் கூடத்தில் இருந்து வர வேண்டிய அறிக்கைக்காகக் காத்திருப்பதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மசீது மஞ்சு(Masidi Manjun) தெரிவித்துள்ளார்.

உலக வன விலங்கு கூட்டமைப்பில் இந்த சிற்றானைகளின் எண்ணிக்கை 1500 ஐ விடக் குறைவாக உள்ளது. இவை குழந்தைத்தனமான முகமும், பெரியகாதுகளும், நீண்ட வாலும் கொண்டவை.

வனவிலக்கு பாதுகாப்பு துறையின் முயற்சிகளாலும், வாழிடப் பாதுகாப்பினாலும், இப்போதும் அழிவில் சிக்கிக் கொள்ளாமல் அவற்றின் எண்ணிக்கையில் வளர்ந்து வருவதாக மசீது தெரிவித்துள்ளார்.  

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!