Wednesday, January 30, 2013

மிக குறைந்த விலையில் அப்பிள் ஐபோன்கள்

மிக குறைந்த விலையில் அப்பிள் ஐபோன்கள்



தங்கள் நிறுவன தயாரிப்புகளின் விற்பனையை அதிகரிப்பதற்காக மிக குறைந்த விலையில் ஐபோனை தயாரிக்க அப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்றைய சூழலில் மொபைல் போன் சந்தையில் மிக குறைவான விற்பனை பங்கினையே அப்பிள் கொண்டுள்ளது. அமெரிக்க நாட்டில் மட்டும் இதன் விற்பனை ஓங்கியுள்ளது.

மற்ற நாடுகளில் அப்பிள் நிறுவன பங்குகளின் பங்கு மிக மிக குறைவே, எனவே வளர்ந்து வரும் நாடுகளில் தன் போன்களை விற்பனை செய்திட அப்பிள் நிறுவனம் குறைந்த விலையில் ஐபோன்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு முடிவிற்குள் வர இருக்கும் இந்த ஸ்மார்ட் போனின் விலை 100 டொலரிலிருந்து 149 டொலருக்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் சாம்சங் மற்றும் கூகுள் நிறுவனத்தின் போன்களுக்கு கடும் போட்டியாக அப்பிள் போன்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த போனை சீனாவில் வெளியிட திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!