Wednesday, February 27, 2013

ஏழுமலையான் வங்கி டெபாசிட் 5,000 கோடியாக உயர்ந்தது

ஏழுமலையான் வங்கி டெபாசிட் 5,000 கோடியாக உயர்ந்தது



திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக வரும் பக்தர்கள், பணம், தங்கம், வைரம் மற்றும் வைடூரியம் உட்பட பல்வேறு பொருட்களை காணிக்கை அளிக்கின்றனர். ஏழுமலையான் கோயில் உண்டி, ஆர்ஜித சேவா, தலைமுடி விற்பனை, தங்கும் அறைகள் மூலமாக கிடைக்கும் வருமானத்தை தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கடந்த 40 ஆண்டுகளாக டெபாசிட் செய்து வருகின்றனர். பக்தர்கள் நன்கொடை வழங்கும் பணமும் வங்கியில் செலுத்தப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் டெபாசிட் தொகை இரண்டு மடங்காக உயர்ந்தது.தேவஸ்தானம் வங்கியில் செலுத்திய பணத்துக்கான வட்டியையும், வங்கியிலேயே செலுத்துவதால் முதலீட்டு தொகை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

உண்டியல் காணிக்கை மூலம் வரும் பணம், நகைகள் உடனடியாக வங்கியில் டெபாசிட் செய்யப்படுகிறது.கடந்த 2002- 2003ம் நிதியாண்டு பட்ஜெட்டில் 629 கோடி வங்கி முதலீடு இருப்பதாக கூறப்பட்டது. இதன் மூலம் வந்த வட்டி மற்றும் அதன் பிறகு செலுத்தப்பட்ட முதலீடு சேர்த்து, கடந்த 2012- 2013 ஆண்டு பட்ஜெட்டில் 4,674 கோடியாக உயர்ந்தது. தொடர்ந்து, வட்டி மற்றும் முதலீடு சேர்த்து இப்போது ஏழுமலையான் கோயில் வங்கி டெபாசிட் 5,207 கோடியாக உயர்ந்துள்ளது. வரும் பட்ஜெட்டில் மேலும் 100 கோடி முதலீடு செய்யப்படும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். ஏழுமலையான் கோயில் முக்கிய வருமானம் உண்டியல் மூலமாக வருகிறது. கடந்த 2009ம் ஆண்டு உண்டியல் வருமானம் 601 கோடியாக இருந்தது. இது, 2010& 2011ம் ஆண்டில் 694 கோடியாகவும், 2011- 2012ம் ஆண்டு  756 கோடியாகவும் உயர்ந்தது. இந்த ஆண்டு 850 கோடியை தாண்டி உள்ளது. தொடர்ந்து, பக்தர்கள் செலுத்தும் காணிக்கை பெருகிக்கொண்டே இருக்கிறது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!