Friday, September 7, 2012

இந்தியாவின் 100வது ராக்கெட்டுக்கான கவுண்ட் டவுன் ஆரம்பம்: 9ம் தேதி விண்ணில் பாய்கிறது


இந்தியாவின் 100வது ராக்கெட்டுக்கான கவுண்ட் டவுன் ஆரம்பம்: 9ம் தேதி விண்ணில் பாய்கிறது






இந்தியாவின் 100வது ராக்கெட் வரும் 9ம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான கவுண்ட் டவுன் இன்று காலை 6.51 மணிக்கு துவங்கியது.

இஸ்ரோ தான் தயாரித்த செயற்கைகோளான ஆர்யப்பட்டாவை ரஷ்ய ராக்கெட்டில் வைத்து 19-4-1975 அன்று விண்ணில் செலுத்தியது. ஆர்யபட்டா மூலம் தனது விண்வெளி பயணத்தை துவங்கிய இஸ்ரோ இதுவரை 62 செயற்கைகோள்கள் மற்றும் பிற நாட்டு செயற்கைகோள்களை தாங்கிச் செல்லும் 37 ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தியுள்ளது. இந்நிலையில் வரும் 9ம் தேதி காலை 9.51 மணிக்கு 100வது ராக்கெட்டை விண்ணில் செலுத்தவுள்ளது.

பிஎஸ்எல்வி-சி21 என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ராக்கெட் 715 கிலோ எடை கொண்ட ஸ்பாட் 6 என்ற பிரான்ஸ் நாட்டு செயற்கைக்கோள் மற்றும் 15 கிலோ எடை கொண்ட பிராய்டெர்ஸ் என்ற ஜப்பானிய செயற்கைக்ககோளை தாங்கிச் செல்கிறது. ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து இந்த 100வது ராக்கெட் விண்ணில் பாய்வதை விஞ்ஞானிகளுடன் சேர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்கும் கண்டு மகிழ்வார்.

பிஎஸ்எல்வி ராக்கெட் தாங்கிச் சென்றுள்ள வெளிநாட்டு ராக்கெட்களில் தற்போது அது தாங்கிச் செல்லும் ஸ்பாட் 6 தான் அதிக எடை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ராக்கெட்டுக்கான 51 மணிநேர கவுண்ட் டவுன் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இன்று காலை 6.51 மணிக்கு துவங்கியது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!