Friday, June 7, 2013

திருமணமாகி 30 ஆண்டுகள் கழித்து மனைவியை விவாகரத்து செய்யும் ரஷ்ய அதிபர் புதின்

திருமணமாகி 30 ஆண்டுகள் கழித்து மனைவியை விவாகரத்து செய்யும் ரஷ்ய அதிபர் புதின்



ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதின் தனது மனைவி லியுட்மிலாவை விவாகரத்து செய்கிறார்.

ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதின் பாலே நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதன் பிறகு அவரும், அவரது மனைவி லியுட்மிலாவும் ரஷ்ய அரசு தொலைக்காட்சியில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அதாவது தாங்கள் இருவரும் திருமணமாகி 30 ஆண்டுகள் கழித்து தற்போது விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்தனர்.

புதின் லியுட்மிலாவை கடந்த 1983ம் ஆண்டு திருமணம் செய்தார். அவர்களுக்கு மரியா, எகடெரினா என்ற 2 மகள்கள் உள்ளனர். இந்த விவாகரத்து முடிவை இருவரும் சேர்ந்து எடுத்ததாக தெரிவித்தனர். லியுட்மிலா கடந்த சில மாதங்களாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தார். அதை வைத்தே ஊடகங்கள் ஏதோ விவகாரம் என்று கணித்து வந்தன. இந்நிலையில் தான் இந்த விவாகரத்து அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.