Tuesday, June 4, 2013

கேரளாவில் பன்றிக்கு வைத்த வலையில் பெண் சிறுத்தை சிக்கியது

கேரளாவில் பன்றிக்கு வைத்த வலையில் பெண் சிறுத்தை சிக்கியது


வாழைகளை நாசம் செய்து கொண்டிருந்த காட்டுப் பன்றிக்கு வைத்த கம்பி வலையில் பெண் சிறுத்தை சிக்கியது. கேரளாவில் பத்தனம்திட்டா அருகே உள்ள கோன்னி வனசரகத்தில் வடக்கு குமரம்பேரூர் பகுதி உள்ளது. இங்கு தனியார் ஒருவருக்கு சொந்தமான வாழை தோட்டத்தில் கடந்த சில தினங்களாக காட்டுப்பன்றிகள் அட்டகாசம் செய்து வந்தன. இதையடுத்து, பன்றிகளை கம்பி வலையில் பிடிக்க தோட்ட உரிமையாளர் திட்டமிட்டார். இதன்படி நேற்று முன்தினம் தோட்டத்தில் 3 இடங்களில் கம்பி வலைகள் வைக்கப்பட்டன.

 தோட்ட காவலர்கள் நேற்று வந்து பார்த்த போது, கம்பி வலை ஒன்றில் பன்றிக்கு பதிலாக ஒரு பெண் சிறுத்தை சிக்கியிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து, தோட்ட உரிமையாளர் கோன்னி போலீசுக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தார். வனத்துறை டாக்டர்களும், தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்தனர். சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்து ஒரு கூண்டில் அடைத்த வனத்துறையினர், அப்பகுதியிலுள்ள மண்ணாரப்பாறை வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!