Thursday, June 6, 2013

சவுதி எரிவாயு கான்ட்ராக்ட்டை போட்டி போட்டு தட்டி சென்றது இந்திய நிறுவனம்!

சவுதி எரிவாயு கான்ட்ராக்ட்டை போட்டி போட்டு தட்டி சென்றது இந்திய நிறுவனம்!


 

சவுதி அரேபிய அரசுக்கு சொந்தமான எரிவாயு புரோசசிங் தொழிற்சாலை ஒன்றின கட்டுமான கான்ட்ராக்டை பெற்றுள்ளது, இந்தியாவின் பிரபல கட்டுமான நிறுவனம்.

சவுதி அரேபியா அரசுக்கு சொந்தமான எரிபொருள் நிறுவனமான அராம்கோ (Saudi Aramco) புதிய தொழிற்சாலை ஒன்றை மிட்யான் என்ற இடத்தில் அமைப்பதற்கு சர்வதேச அளவில் டென்டர்களை கோரியிருந்தது.

அமெரிக்க, மற்றும் ஐரோப்பிய கட்டுமான நிறுவனங்களும் இந்த கான்ட்ராக்டை பெறுவதற்கு போட்டியிட்ட நிலையில், இந்திய நிறுவனமான L&T, கான்ட்ராக்ட் தமக்கு கிடைத்துள்ளது என்பதை அறிவித்துள்ளது. L&T (விரிவாக்கம் – Larsen & Toubro) மும்பையை தலைமையகமாக கொண்டுள்ள, பிரபல கட்டுமான மற்றும் பொறியியல் நிறுவனம்.

சவுதி அரேபியாவின் அராம்கோ, வெளிநாட்டில் எரிவாயு மார்க்கெட்டிங்கை அதிகரிப்பதற்காக இந்த புதிய எரிவாயு தொழிற்சாலையை (gas processing plant) அமைப்பதாக அறிவித்திருந்தது.

இந்திய நிறுவனம் இன்று விடுத்துள்ள அறிக்கையின்படி, இந்த தொழிற்சாலையில் நாள் ஒன்றுக்கு 75 மில்லியன் ஸ்டான்டர்ட் கன அடி எரிவாயு தயாரிக்க முடியும்!

இந்திய நிறுவனத்துக்கு கிடைத்த கான்ட்ராக்ட்டின் மொத்த மதிப்பு எவ்வளவு என்பது அறிவிக்கப்படவில்லை. நிச்சயம் பல மில்லியன் டாலர்களாக இருக்கும். இப்படியான கான்ட்ராக்ட்டுகளை பெறுவதற்கு நிறுவனம் உள்ள நாடு, ‘சில வகைகளில்’ உதவுவது வழக்கம்.



Read more: http://viruvirupu.com/2013/06/05/55545/#ixzz2VQRFR4dA

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!