Wednesday, June 5, 2013

2 பீட்சாக்களை டெலிவரி செய்த டாமினோஸின் ஆளில்லா விமானம் டாமிகாப்டர்

2 பீட்சாக்களை டெலிவரி செய்த டாமினோஸின் ஆளில்லா விமானம் டாமிகாப்டர்










டாமினோஸ் நிறுவனம் ஆளில்லா விமானம் மூலம் 2 பீட்சாக்களை லண்டனில் டெலிவரி செய்துள்ளது. டாமினோஸ் நிறுவனம் டி ப்ளஸ் பிஸ்கட்ஸ் என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த நிறுவனம் மற்றும் ஆளில்லா விமானங்களைச் செய்வதில் கைதேர்ந்த நிறுவனமான ஏரோசைட்டுடன் ஒரு ஒப்பந்தம் செய்தது.

அதாவது ஆளில்லா விமானம் மூலம் பீட்சா டெலிவரி செய்வது தான் டாமினோஸின் திட்டம். அதன்படி பீட்சா டெலிவரிக்கு என்றே பிரத்யேகமான ஆளில்லா விமானம் செய்யப்பட்டது.


டாமிகாப்டர் 


டாமினோஸ் பீட்சா டெலிவரிக்காக செய்யப்பட்ட விமானத்திற்கு டாமிகாப்டர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

முதல் டெலிவரி 


டாமிகாப்டர் லண்டனுக்கு வெளியே உள்ள கில்ட்போர்ட் வழியாக 10 நிமிடங்கள் பறந்து சென்று 2 லார்ஜ் பீட்சாக்களை டெலிவரி செய்துள்ளது.

ஒரே நேரத்தில் 2 தான் 

டாமிகாப்டர் ஒரே நேரத்தில் 2 பீட்சாக்களை மட்டும் எடுத்துச் செல்லும் திறன் கொண்டது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!