Tuesday, June 4, 2013

சடசடவென குறைந்த ரூபாய் மதிப்பு.. ஏன்? ஏன்?

சடசடவென குறைந்த ரூபாய் மதிப்பு.. ஏன்? ஏன்?



புதன்கிழமை ரூபாய் தன்னுடைய 9 மாத குறைந்த மதிப்பை தொட்டுவிட்டது. மேலும் ருபாயின் வரலாற்றில் இல்லாத அளவிற்கு முகக் குறைந்த மதிப்பை தொட்டுவிடுமோ? என்கிற அச்சம் முதலீட்டாளர்களிடம் ஏற்பட்டு வருகிறது. ஏன் இந்த நிலை? இதை விளக்குவதிற்கு 5 காரணங்கள் இதோ.

பிற நாணயங்களுக்கு எதிராக டாலரின் வலிமை:அமெரிக்க டாலர் இந்திய நாணயமான ரூபாய்க்கு எதிராக மட்டும் வலிமை பெற வில்லை. இது அனைத்து நாட்டு நாணயங்களுக்கு எதிராகவும், உதாரணமாக யூரோ போன்ற பிற நாணயங்களுக்கு எதிராகவும், வலிமை பெற்று வருகிறது. இது அமெரிக்காவின் பொருளாதாரம் ஒரு வலுவான மீட்சி நிலையில் உள்ளது எனபதையே குறிக்கிறது. அமெரிக்க பொருளாதார மீட்சி மேலும் வலுவடையும் பொழுது, அமெரிக்க டாலர், இந்திய ரூபாய் உட்பட பிற நாணயங்களுக்கு எதிராக கண்டிப்பாக வலிமை பெறும்.

அதிகரிக்கும் தங்க இறக்குமதி:

வீழ்ச்சி கண்டு வரும் தங்கத்தின் விலை, இந்தியாவில் அதன் தேவையை அதிகரிக்க செய்து விட்டது. உண்மையில், ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் தங்க இறக்குமதி இரண்டு மடங்காகிவிட்டது. தங்க இறக்குமதி நிச்சயம் வர்த்தக பற்றாக்குறையை அதிகரிக்கும். அதன் தாக்கம் கண்டிப்பாக ரூபாயின் மதிப்பில் எதிரொலிக்கும்.


அதிகரிக்கும் வர்த்தக பற்றாக்குறை:

இரண்டு மடங்குக்கும் அதிகமான தங்க இறக்குமதி, அதாவது $ 3.5 பில்லியனிலிருந்து $ 7.5 பில்லியனாக அதிகரித்த தங்க இறக்குமதி, ஏப்ரல் மாதத்திற்கான வர்த்தக பற்றாக்குறையை $ 17.7 பில்லியனாக உயர்த்தி விட்டது. அதிகரிக்கும் வர்த்தக பற்றாக்குறை டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு குறைவதற்கு மிக முக்கியமான் காரணமாகிவிட்டது.


குறைந்து வரும் வெளிநாட்டு நிதி:

இந்தியாவிற்கு டாலர்களை கொண்டு வரும் வெளிநாட்டு நிதிகளின், இந்திய சந்தை முதலீடுகள் குறைந்து வருகிறது. அவர்கள் இந்திய பங்கு சந்தையில் வரலாறு காணத அளவு முதலீடு செய்திருந்தாலும் அதன் வேகம் குறையத் தொடங்கி விட்டது.

மெளனம் சாதிக்கும் இந்திய ரிசர்வ் வங்கி:

பொதுவாக, ரூபாயின் மதிப்பு விழும் போது, இந்திய ரிசர்வ் வங்கி, ரூபாயின் மதிப்பை மீட்பதற்காக டாலர்களை விற்கும். தற்பொழுது ரிசர்வ் வங்கி ரூபாயின் மதிப்பை நிலை நிறுத்துவதற்காக எந்த வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை என தெரிவிக்கிறார்கள். இந்திய ரிசர்வ் வங்கி, அந்நிய செலாவணி சந்தையில் அதிக ஏற்ற இறக்கம் இருக்கும் போது மட்டுமே தலையிடும் என கடந்த கால வரலாறு தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!