Tuesday, February 12, 2013

விண்வெளியில் பாட்டு பாடி பதிவு செய்த நண்பர்கள்

விண்வெளியில் பாட்டு பாடி பதிவு செய்த நண்பர்கள்(வீடியோ இணைப்பு)


விண்வெளியில் முதன் முதலாக ஒரு பாடல் எழுதி, பாடி அதை கனடிய மற்றும் அமெரிக்கர் இருவரும் பதிவு செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
கனடாவை சேர்ந்த விண்வெளி வீரர் ஒருவரும் அமெரிக்காவின் இசைக்குழுவை சேர்ந்த பாடகர் ஒருவரும் இணைந்து இந்த சாதனையை செய்துள்ளனர்.

பூமிக்கு மேலே 402 கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி பணிபுரியும் கனடாவை சேர்ந்த கிறிஸ் ஹேட்பீல்டு நல்ல பாடகர் ஆவார்.

இவரும் பேர்நேக்டு லேடீஸ் என்ற இசைக்குழுவின் முக்கிய பாடகர் எட் ராபர்ட்சனும் நல்ல நண்பர்கள். இருவரும் சேர்ந்து விண்வெளியில் இருந்து ஒரு பாடலை பாடி, பதிவு செய்ய திட்டமிட்டனர்.

இதன் படி சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள கப்போலா எனும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கிறிஸ் ஹேட்பீல்டும் கனடாவில் உள்ள ஒலிப்பதிவுக் கூடம் ஒன்றில் இருந்த எட் ராபர்ட்சனும் இணைந்து இந்த பாடலை எழுதினர்.

பின் செயற்கைக்கோள் ஒளிபரப்பு மூலம் கிறிஸ் ஹேட்பீல்ட் பாடிய பாடல் பூமியில் உள்ள ஒலிப்பதிவு கூடத்தில் பதிவு செய்யப்பட்டது.

அவருடன் எட் ராபர்ட்சனும் இணைந்து பாடினார். விண்வெளி வீரர் ஒருவர் பூமியில் உள்ள தன் அன்புக் குரியவர்களை நினைத்து பாடுவதாக பாடல் வரிகள் அமைந்துள்ளன. பாடல் ஒலிப்பதிவு சிறப்பாக அமைந்துள்ளதாக, எட் ராபர்ட்சன் தெரிவித்துள்ளார்.

தன் விண்வெளி பணிகளுக்கு இடையில் இன்னும் சில பாடல்களை உருவாக்கி ஒரு இசை ஆல்பம் தயாரிக்க கிறிஸ் ஹேட்பீல்டு திட்டமிட்டு உள்ளார்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!