Wednesday, February 13, 2013

காண்டம் உபயோகித்தாலும் மோசமில்லை… ஆய்வில் தகவல்

காண்டம் உபயோகித்தாலும் மோசமில்லை… ஆய்வில் தகவல்


உறவின் போது காண்டம் உபயோகித்தால் ஆண்களுக்கு எழுச்சியில் பிரச்சினை வரும் என்ற வாதத்தை தகர்த்துள்ளது புதிய ஆய்வு முடிவு ஒன்று. ஆணுறை அணிந்தாலும், அணியாவிட்டாலும் ஆண்களுக்கு உறுப்பு எழுச்சி இயல்பாகவே இருக்கும் என்று நிரூபித்துள்ளது புதிய ஆய்வு முடிவு ஒன்று.

இதுதொடர்பாக அமெரி்க்காவின் இன்டியானா பல்கலைக்கழகத்தின் பொது சுகாதார கல்வி நிறுவனம் ஒரு ஆன்லைன் கருத்துக் கணிப்பை நடத்தியது. அதில் 18 முதல் 59 வயது வரையிலான ஆண்களிடம் அவர்களின் செக்ஸ் பழக்க வழக்கங்கள் குறித்த கருத்துக்கள் கேட்கப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த முடிவை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

ஆணுறை அணிந்து உறவு கொள்ளும்போது ஆண்கள் சவுகரியமாகவே உணர்கிறார்கள் என்றும் அவர்களுக்கு உறுப்பு எழுச்சி குறைபாடு வருவதில்லை என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும், ஆணுறை அணியாமல் உடலுறவு கொள்ளும்போதும், ஆணுறை அணிந்து உடலுறவு கொள்ளும்போதும் ஒரே மாதிரியான இன்பத்தையே அனுபவிப்பதாகவும், வித்தியாசம் எதையும் உணர்வதில்லை என்றும் கூறியுள்ளனர்.

பெரும்பாலான ஆண்கள் ஆணுறை அணிவதையே விரும்புவதாக இந்தக் கருத்துக் கணிப்பில் கூறியுள்ளனர். ஆணுறையால் தங்களதுஉறவில் எந்தவிதமான பாதிப்பும் வருவதில்லை என்றும், அதனால் சுகத்தில் குறைபாடு எதுவும் வருவதில்லை என்றும், உறுப்பு எழுச்சி இயல்பாகவே இருப்பதாகவும் அவர்கள் கணக்கெடுப்பில் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், பெண்களுக்கு இந்த ஆணுறையானது சில அசவுகரியங்களைக் கொடுப்பதாக கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. தங்களுக்கு இன்பத்தைக் கொடுக்கும்படியான ஆணுறைகளை ஆண்கள் அணிய வேண்டும் என்பதும் பெண்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!