Tuesday, February 12, 2013

தெற்காசியாவில் பிரமாண்ட சென்னை ஏர்போர்ட்

தெற்காசியாவில் பிரமாண்ட முனையம் தகதகக்கும் சென்னை ஏர்போர்ட்விமான நிலையத்தை நவீனப்படுத்தவும், பெரிய அளவில் விரிவாக்கம் செய்யவும் முடிவு செய்யப்பட்டு, கடந்த 2008ல் விரிவாக்கப்பணிகள் தொடங்கின. இந்த பணிகளுக்காக ஸீ1,800 கோடி ஒதுக்கப்பட்டது.நிலம் கையகப்படுத்துதல், கட்டுமான பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் தொழிலாளர்கள் பிரச்னை போன்ற காரணங்களால் பணிகளில் தாமதம் ஏற்பட்டது. இதனால் கூடுதல் செலவு செய்ய வேண்டியிருந்தது. இதன் காரணமாக இதுவரை மொத்தம் ஸீ2 ஆயிரம் கோடி வரை செலவிடப்பட்டுள்ளது.பணிகள் முழுமையாக முடிந்துவிட்டதால், 2 விமான முனையங்களும் திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளன. உள்நாட்டு முனையத்தில் கடந்த ஏப்ரல் 30ம் தேதியும், சர்வதேச முனையத்தில் ஜூலை 24ம் தேதியும் சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டன. புதுப்பிக்கப்பட்ட விமான முனையங்களை துணை ஜனாதிபதி அமீத் அன்சாரி, வரும் 28ம் தேதி திறந்து வைக்கவுள்ளார். கடந்த 2009ல் சென்னை விமான நிலையத்துக்கு சிறந்த வடிவமைப்புக்கான பரிசு வழங்கப்பட்டது. 2001ல் ஐஎஸ்ஓ 9001&2000 சர்வதேச தரச் சான்றும் இந்த விமான நிலையத்துக்கு வழங்கப்பட்டது இதன் பெருமையை மேலும் சிறக்க வைத்துள்ளது. பன்னாட்டு விமான முனையம் 4 லட்சத்து 61 ஆயிரத்து 400 சதுர அடி பரப்பிலும், உள்நாட்டு முனையம் 2 லட்சத்து 7200 சதுர அடி பரப்பிலும் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் 2 ரன்வேக்கள் உள்ளன. முதல் ரன்வே 3656 மீட்டரும், 2வது ரன்வே 2955 மீட்டரும் நீளம் கொண்டவை.சென்னை விமானநிலையம் அதிக பரப்பளவையும், நவீன வசதிகளையும் கொண்ட விமான நிலையம். ஆண்டுக்கு சுமார் 1 கோடி பணிகளையும் 5 லட்சத்து 42 ஆயிரத்து 460 டன் சரக்குகளையும் கையாளும் திறன் கொண்டுள்ளது. பரப்பளவு, கையாளும் திறன், நவீன வசதிகளில் தெற்காசியாவிலேயே மிகப்பெரிய விமான நிலையமாக சென்னை விமான நிலையம் பெயர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.எண்ணிக்கை அதிகரிப்பு: சென்னை விமான நிலையத்தில் 10 ஆண்டுக்கு முன்பு நாள் ஒன்றுக்கு உள்நாடு, சர்வதேசம் மற்றும் சரக்கு விமானங்கள், தனியார் பயன்படுத்தும் தனி விமானங்கள் என சுமார் 150க்கும் குறைவான விமானங்களே வந்து சென்றன.  ஆனால், தற்போது நாள் ஒன்றுக்கு 450 விமானங்கள் வரை வந்து செல்கின்றன. முன்பு ஒரு நாளைக்கு 10 ஆயிரத்துக்கு குறைவான பயணிகளே வந்தனர். ஆனால், தற்போது 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நவீன வசதிகள்:  முன்பு 9 ஏரோ பிரிட்ஜ்கள் மட்டுமே இருந்தன. மேலும் 7 ஏரோ பிரிட்ஜ்கள் அமைக்கப்பட்டு, தற்போது, 16 ஏரோ பிரிட்ஜ்கள் உள்ளன.  இதனால், பயணிகள் விமானத்தில் ஏறி, இறங்குவதற்கு சுலபமாவதோடு நேரமும் குறையும். பலத்த மழை பெய்தாலும் கூட பயணிகள் சிறிதும் நனையாமல் நேரடியாக விமான நிலையம் வரலாம். பார்க்கிங் வசதி: முன்பு சென்னை விமான நிலையத்தில் விமானங்களை நிறுத்துவதற்காக 65 பார்க்கிங் பகுதிகள் இருந்தன. தற்போது 90ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. விமானங்கள் நிறுத்த இடமில்லாமல் வானிலேயே வட்டமடித்து வரும் நிலை இருந்தது.  இதனால், பெட்ரோல் செலவு மட்டுமல்லாமல் காலதாமதமும் ஏற்படும். ஆனால், இப்போது, ஏற்கனவே இருந்த பார்க்கிங் வசதியைவிட மேலும் 25 விமானங்களை நிறுத்துவதற்கான இட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.எளிதாக சென்று வரலாம்: முன்பு பழைய முனையத்தில் பயணிகள் வருகை, புறப்பாடு 2 பகுதிகளுமே தரை தளத்திலேயே அமைந்திருந்தன. புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள 2 முனையங்களிலும் தரை தளத்தில் வருகை பகுதியும், முதல் தளத்தில் புறப்பாடு பகுதியும் அமைந்துள்ளது. 

அதோடு, அதிநவீன கன்வேயர் பெல்ட்கள், சுங்க, பாதுகாப்பு, குடியுரிமை சோதனை ஆகிய இடங்களில் பயணிகளுக்கு விசாலமான இடவசதி, பயணிகள் போர்டிங் பாஸ் வாங்குவதற்கு கூடுதலான கவுன்டர்கள் போன்றவையும் அமைக்கப்பட்டுள்ளன.இந்த புதிய விமான முனையங்கள் திறப்பு விழா நடத்தினாலும், முழுமையான பயன்பாட்டுக்கு கொண்டு வர 2 மாதத்திற்கு மேல் ஆகும். ஏனென்றால், புதிய முனையங்களில் ஏர்லைன்ஸ் அலுவலகங்கள், கவுன்டர்கள் ஏற்படுத்தவேண்டும். அதோடு பலதரப்பட்ட வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள், வங்கி ஏடிஎம்களை இடமாற்றம் செய்ய கால அவகாசம் தேவை. அவற்றை புதிய முனையங்களில் அமைத்தபின் ஏப்ரல் மாதத்தில் இருந்து முழுமையாக செயல்படும் என தெரிகிறது.வணிக வளாகம், பயணிகள் தங்கும் அறை: ஏற்கனவே பழைய முனையத்தில் உள்ள கட்டிடங்கள் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் புதிய வணிக நிறுவனங்கள், பயணிகள் தங்குவதற்கான அறைகள், விமான நிறுவனங்களுக்கு தேவையான கட்டிடங்கள் கட்டப்படவுள்ளன. இதற்கான பணிகள் விரைவில் நடைபெறும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


*இந்தியாவின் முதல் விமான நிலையம் என்ற பெருமை சென்னை விமான நிலையத்துக்கு உண்டு.
*1910 மார்ச் 10ம் தேதி டி.ஏஞ்சல்ஸ் என்பவர் பைப்புகளால் தான் தயாரித்த விமானத்தை முதன்முதலில் பல்லாவரத்தில் சோதனை முயற்சியாக ஓட்டினார். இதுதான் ஆசியாவின் முதல் விமானம்.
*1912ல் இண்டியன் ஸ்டேட் ஏர் சர்வீஸ் என்ற நிறுவனமும், இங்கிலாந்தை சேர்ந்த இம்பீரியல் ஏர்வேஸ் நிறுவனமும் கூட்டு சேர்ந்து உள்நாட்டு விமான சேவையை தொடங்கின.
*கேப்டன் வி.சுந்தரம் 1936ல் வணிகரீதியாக விமானத்தை இயக்கும் லைசென்ஸ் பெற்று காராச்சிக்கும் சென்னைக்கும் இடையே விமானத்தில் பறந்தார்.
*1932ல் ‘புஸ் மோத்‘ என்ற முதல் விமானம் சென்னை விமான நிலையத்தில் இறங்கியது.
*இரண்டாம் உலகப்போரின்போது சென்னை விமான நிலையம் ராணுவ விமானங்களுக்காக பயன்படுத்தப்பட்டது.
*இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு 1952ல் மத்திய விமான போக்குவரத்துத் துறை, சென்னை விமான நிலையத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது.
*1972ல் முதல் விமானத்தை விமான போக்குவரத்து துறை இயக்கியது.
*1985ல் புதிய உள்நாட்டு முனையமும் அதை தொடர்ந்து 1989ல் வெளிநாட்டு முனையமும் அமைக்கப்பட்டது.