Thursday, February 14, 2013

பெண்களை விட ஆண்கள்தான் ரொமான்ஸில் சூப்பராம்...!

பெண்களை விட ஆண்கள்தான் ரொமான்ஸில் சூப்பராம்...!



ரொமான்ஸ்... இதற்கு மயங்காத ஆளே கிடையாது.. இதை அடிச்சிக்கவும் வேறு விஷயமே கிடையாது.. எப்பேர்ப்பட்ட ஆளாக இருந்தாலும் ரொமான்ஸுக்கு மயங்காவிட்டால் பிறந்ததற்கே பலன் இல்லை...

பைக்கில் ஏறி சட்டை வேகமாக படபடக்க, ஜிவ்வென்று காற்று முகத்தில் அடிக்க, மனசுக்குள் அலை அலையாக எண்ணங்கள் சிறகடிக்க, மனதுக்குள் பொங்கி எழும் உணர்வுகளை ஆண்கள் எப்பவுமே அழகாக வெளிப்படுத்துவார்கள். பெண்களைப் பொறுத்தவரை உணர்வுகளை வெளிப்படுத்துவதிலும் சரி, ரொமான்ஸை வெளிப்படுத்துவதிலும் சரி கொஞ்சம் அடக்கம் அதிகமாகவே இருக்கும்.

ரொமான்ஸ் செய்வதில் எப்போதுமே ஆண்கள்தான் பெஸ்ட்... இது ரொம்ப காலமாகமாவே பலரும் சொல்லி வரும் ஒன்றுதான். ஆனால் அதை அதிகாரப்பூர்வமாக ஒரு சர்வேயில் சொல்லியுள்ளனர் இப்போது.

கிட்டத்தட்ட 50 சதவீதம் பேர் ஆண்கள்தான் ரொமான்ஸ் செய்வதிலும், ரொமான்டிக்காக நடந்து கொள்வதிலும் பெஸ்ட் என்று சொல்லியுள்ளனர் இந்த சர்வேயில். அதேசமயம், ஆண்களுடன் ஒப்பிடுகையில், பெண்கள் ரொமான்ஸில் ரொம்ப தூரம் பின்தங்கியுள்ளனராம். ஒரு கார்டு கொடுத்தும் , சின்னதாக ஒரு கிப்ட் கொடுத்தும் தங்களது ரொமான்ஸை முடித்துக் கொள்வார்களாம் பெண்கள். ஆனால் ஆண்கள் அப்படி இல்லையாம்... நிறைய மெனக்கெடுவார்களாம், தங்களது காதலையும், உணர்வுகளையும் தெரிவிக்க.

இங்கிலாந்தில் 2000 ஆண், பெண்களிடம் காதலர் தினத்தையொட்டி நடத்தப்பட்டது ஒரு சர்வே. அதில் கலந்து கொண்டவர்களிடம் யார் அதிக ரொமான்ட்டிக்காக செயல்படுவது என்று கேட்கப்பட்டது . அதற்குத்தான் இப்படிப் பதில்கள் வந்துள்ளன. 21.5 சதவீத பெண்கள் கூறுகையில், பெரிய அளவில் காதலர் தினத்தைக் கொண்டாட மாட்டோம் என்று கூறினராம். அதேசமயம், ஆண்களில் 14.5 சதவீதம் பேரே காதலர் தினத்தைக் கொண்டாட மாட்டோம் என்று கூறினராம். மேலும் 25 சதவீத பெண்கள், வெறும் கார்டுடன் கடையை மூடி விடுவார்களாம். ஆண்களில் 16 சதவீதம் பேர் மட்டுமே கார்டு அனுப்பி காதல் வாழ்த்து சொல்கின்றனராம்.

அதேபோல தங்களது துணையை மகிழ்விக்க நிறைய முயற்சி எடுப்பது என்று பார்த்தாலும் ஆண்கள்தான் முதலிடத்தில் இருக்கின்றனர். செலவழிப்பதிலாகட்டும், மெனெக்கெடுவதிலாகட்டும், கஷ்டப்படுவதிலாகட்டும், உணர்வுகளை வெளிப்படுத்துவதிலாகட்டும் எல்லாவற்றிலும் ஆணக்ள்தான் முன்னணியில் உள்ளனராம்.

காதலியை வெளியே கூட்டிச் செல்வது, அவருக்குப் பிடித்ததை வாங்கிக் குவிப்பது, அவர் கூப்பிடும் இடத்திற்கு ஓடி வருவது, பிடித்த உணவை வாங்கித் தருவது, கேன்டில் லைட் டின்னர் ஏற்பாடு செய்வது, வெளியில் அழைத்துச் செல்வது என்று விழுந்து விழுந்து கவனிப்பதில் ஆண்கள்தான் செம சமர்த்தாம். (பின்னே, வேலை ஆக வேண்டுமே...)

நீங்க என்ன சொல்றீங்க, ரொமான்ஸில் ஆண்கள் பெஸ்ட்டா, இல்லை பெண்கள் பெஸ்ட்டா...?

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!