Thursday, February 14, 2013

சுவாமிமலையில் வடிவமைத்த பள்ளி கொண்ட ரங்கநாதர் சிலை மும்பைக்கு அனுப்பப்பட்டது

சுவாமிமலையில் வடிவமைத்த
பள்ளி கொண்ட ரங்கநாதர் சிலை மும்பைக்கு அனுப்பப்பட்டது



சுவாமிமலையில் வடிவமைக்கப்பட்ட பள்ளிகொண்ட ரங்கநாதர் சிலை பிரதிஷ்டைக்காக மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  மகாராஷ்டிர மாநிலம் மும்பை கிழக்கு தாதரில் கோவிந்த்ஜி கெனி சாலையில் உள்ள காட்ரே மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் பால்சந்த்ர காட்போலே.  இவர் மருத்துவமனையில் வைத்து வழிபடுவதற்காக தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த சுவாமிமலை திருமஞ்சனவீதி சவுத் இண்டியன் ஆர்ட் சென்டர் ராமலிங்கம் ஸ்தபதியிடம் இரண்டடி நீளம், ஒன்றரை அடி உயரத்தில் 60 கிலோ எடையில் பள்ளிகொண்ட ரங்கநாதரின் பஞ்சலோக சிலையை வடிவமைத்து தருமாறு கேட்டிருந்தார்.

அந்த சிலை திருப்பாற்கடலில் ஐந்து தலைகளை கொண்ட ஆதிசேஷன் மேல் ஸ்ரீமந்நாராயணன் தனது வலது கரத்தால் சிரத்தை தாங்கி சயனத்தில் இருக்கும்படியும், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோர் சாமியின் பாதம் அருகே அமர்ந்து அவருடைய திருப்பாதங்களை அழுத்தி விட்டுக்கொண்டு இருப்பதுபோல வும் வடிவமைக்கப் பட்டுள்ளது. மேலும் ஸ்ரீமந்நாராயணனின் நாபிக்கமலத்தில் இருந்து புறப்படும் கொடி யின் மேல் சிருஷ்டி கடவுள் பிரம்மா தாமரைப்பூவின் மேல் அமர்ந்துள்ளார். இந்த சிலை 2 மாதங்களாக 62 கிலோ எடையில் உருவாக்கப்பட்டு பிரதிஷ்டை செய்வதற்காக கடந்த 11ம் தேதி மும்பைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!