Friday, February 15, 2013

உலகின் 'டாப் 10' மகிழ்ச்சியான நாடுகள்

உலகின் 'டாப் 10' மகிழ்ச்சியான நாடுகள்: இதிலும் இந்தியாவுக்கு இடமில்லை


போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள டாப் 20 சந்தோஷமான நாடுகள் பட்டியலில் இந்தியா இல்லை.

போர்ப்ஸ் பத்திரிக்கை உலகில் உள்ள நாடுகளில் டாப் 20 சந்தோஷமான நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முதலிடத்தில் இருப்பது நார்வே. ஆனால் இந்த பட்டியலில் இந்தியா இல்லை.

இப்பட்டியலில் லக்சம்பர்க் 11வது இடத்திலும், அமெரிக்கா 12வது இடத்திலும் உள்ளன. மேலும் இங்கிலாந்து, ஜெர்மனி, ஐஸ்லாந்து, ஆஸ்திரியா, பெல்ஜியம், ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் தைவான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.



உலகின் சந்தோஷமான நாடு நார்வே 

உலகிலேயே நார்வே தான் சந்தோஷமான நாடு ஆகும். பிற நாடுகளை ஒப்பிடுகையில் இங்குள்ள மக்களின் வாழ்க்கை தரம் மேம்பட்டு உள்ளது. பொருளாதாரத்தில் உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது நார்வே.

 

2வது சந்தோஷமான நாடு டென்மார்க் 

உலகின் சந்தோஷமான டாப் 20 நாடுகள் பட்டியலில் 4வது ஆண்டாக இரண்டாவது இடத்தில் இருக்கும் நாடு டென்மார்க்.


3வது இடத்தில் ஸ்வீடன் 

கடந்த 2009ம் ஆண்டு போர்ப்ஸ் பட்டியலில் 7வது இடத்தில் இருந்த ஸ்வீடன் இந்த ஆண்டு 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.


ஆஸ்திரேலியாவுக்கு 4வது இடம் 

உலகின் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் ஆஸ்திரேலியாவுக்கு 4வது இடம் கிடைத்துள்ளது. உலக அளவில் ஆஸ்திரேலியா கல்வியில் 2வது இடத்திலும், தனிநபர் சுதந்திரத்தில் 3வது இடத்திலும் உள்ளது.


5வது இடத்தில் நியூசிலாந்து 

கல்வியில் முதலிடம், தனி நபர் சுதந்திரம் மற்றும் ஆளுமையில் இரண்டாவது இடத்தில் உள்ள நியூசிலாந்து உலகின் 5வது சந்தோஷமான நாடு ஆகும்.



6வது இடத்தில் குளிருக்கு பெயர் போன கனடா 

தனிநபர் சுதந்திரத்தில் முதலிடத்தில் இருக்கும் கனடா உலகின் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.


பின்லாந்துக்கு 7வது இடம் 

பாதுகாப்பு, வாய்ப்பு ஆகியவற்றில் உலக அளவில் 3து இடத்தில் இருக்கும் பின்லாந்து உலகின் 7வது சந்தோஷமான நாடு ஆகும்.

8வது இடத்தில் நெதர்லாந்து 

உலகின் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் நெதர்லாந்துக்கு 8வது இடம் கிடைத்துள்ளது.


9வது இடத்தில் குளு குளு சுவிட்சர்லாந்து 

அழகான இடங்களால் உலக மக்களை கவரும் சுவிட்சர்லாந்து உலகின் 9வது சந்தோஷமான நாடு ஆகும். பொருளாதாரம், ஆளுமையில் முதலிடத்தில் இருந்தாலும் கல்வியில் 32வது இடத்தில் உள்ளது.



10வது இடத்தில் அயர்லாந்து 

உலகின் பத்தாவது சந்தோஷமான நாடான அயர்லாந்து தனிநபர் சுதந்திரத்தில் 4வது இடத்தில் உள்ளது.



இந்தியா சந்தோஷமான நாடு இல்லையா? 

உலகின் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் இந்தியா இல்லை.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!