Thursday, February 28, 2013

லார்ஜ் ஹாட்ரன் கொலைடர் புதுப்பிக்கப்படுகிறது

லார்ஜ் ஹாட்ரன் கொலைடர் புதுப்பிக்கப்படுகிறது



அணு துணிக்கைகளை மோதச் செய்து அவை குறித்த பரிசோதனைகளை செய்ய உதவும் பெரிய இயந்திரமான லார்ஜ் ஹாட்ரன் கொலைடர் என்னும் கருவி புதுப்பிக்கப்படுகிறது.

இதுவரை மாயமாக இருந்த ஹிக்ஸ் போசொன் துணிக்கைகளை கண்டுபிடிக்க இந்தக் கருவி விஞ்ஞானிகளுக்கு உதவியது.

சுவிட்சர்லாந்தின் சேர்ன் பரிசோதனைக்கூடத்தில் இருக்கும் இந்தக் கருவி, பல புதிய விடயங்களை சேர்ப்பதற்கும் பழுதுபார்ப்பதற்குமாக நிறுத்தப்பட்டிருந்தது.
அடுத்த வருட இறுதியில் அது மீண்டும் செயற்படத்தொடங்கும் போது, மிகவும் சக்திவாய்ந்த துணிக்கைகளை வேகமாக மோதச் செய்யும் தனது சாதனைகளையே அது முறியடித்துவிடும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
4 வருடங்களுக்கு முன்னர் செயற்படத்தொடங்கிய இந்த லார்ஜ் ஹட்ரன் கொலைடர் இயந்திரம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்ட பின்னர் இதுவரை தனது உச்ச வேகத்தில் அது இயக்கப்படவில்லை.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!